மின் கட்டணத்தை உயர்த்துவதா? பின்னலாடை துறையினர் எதிர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:24

திருப்பூர்:திருப்பூரில், உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நிட்டிங், டையிங், காம்பாக்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, செக்கிங், அயர்னிங், காஜாபட்டன் என பல்வேறுவகை ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன.ஆயத்த ஆடை நிறுவனங்கள், உள்நாடு, வெளிநாட்டு அதிநவீன மெஷின்களை ஆடை தயாரிக்க பயன்படுத்துகின்றன.


நிறுவனங்களின் இயக்கத்துக்கு, மின்சாரம் இன்றியமையாததாக உள்ளது.ஆடை உற்பத்தி செலவில், மின் கட்டணத்தில் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. உலகளாவிய வர்த்தக சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்துவருகிறது. வர்த்தக போட்டிகளை சமாளிப்பதற்காக பல்வேறுவகை முயற்சிகளில் இறங்கியுள்ள தொழில் துறையினர், சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவி, மின் கட்டண செலவை குறைப்பதற்கு, திட்டங்கள் வகுத்துள்ளனர்.மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது. இந்த ஆணையம், நடப்பு ஆண்டு, மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல், பின்னலாடை துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், ஆடை உற்பத்தி செலவினம் மேலும் பல மடங்கு உயர்ந்துவிடும் என கவலை அடைந்துள்ளனர்.


திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:மின் கட்டணத்தை உயர்த்துவதால் மட்டும், மின் வாரியத்தின் வருவாயை அதிகரித்துவிட முடியாது. மின் வழித்தடங்களை சரி செய்வது, காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது.மின் வாரியத்தை லாபகரமாக இயங்கும் நிறுவனமாக மாற்றுவதற்கான தொலை நோக்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வு என்கிற நிலைப்பாட்டை கைவிட வேண்டும். கட்டணத்தை உயர்த்தினால், ஆடை உற்பத்தி துறை மட்டுமல்ல... பல்வேறுவகை தொழில்கள் தமிழகத்தில் பாதிப்படையும். பல்வேறு பிரச்னைகளால் ஏற்கனவே, ஆடை உற்பத்தி துறை பல இன்னல்களை எதிர்கொண்டு வருகிறது.மின்கட்டணம் உயர்வு, சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்திவிடும்.


ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா என, வெளிமாநிலங்களெல்லாம், சலுகைகளை வழங்கி, தங்கள் மாநிலங்களில் தொழில் துறையையும், வேலை வாய்ப்பையும் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன; முதலீடுகளை ஈர்த்து வருகின்றன.பிற மாநிலங்களை மிஞ்சும் வகையில், தமிழக அரசு, தொழில் வளர்ச்சிக்கு உகந்த புதிய திட்டங்கள், சலுகைகளை அளிக்கவேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து, இதுகுறித்து கோரிக்கை வைக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X