தொய்வு! விமான ஓடுபாதை விரிவாக்க நில ஆர்ஜித பணிகள்... உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது இழுபறி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
00:52

மதுரை : மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்கு ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இழுபறி நிலவுகிறது. இதனால் ஓடுபாதை விரிவாக்க பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.



தென் மாவட்ட பயணிகளின் நலன் கருதி மதுரையிலிருந்து நேரடியாக சர்வ தேச விமானங்களை இயக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. சர்வ தேச விமானங்கள் வந்து செல்ல வசதியாக ஓடுபாதையை விரிவுபடுத்திட வேண்டும். தற்போதுள்ள 7500 அடி நீள ஓடுபாதையை 12,500 அடி வரை விரிவுபடுத்த தேசிய விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்து விட்டது.



இதற்காக பாப்பானோடை, பெருங்குடி, குசவன்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் 300 பேருக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க மாநில அரசு ரூ.161 கோடி ஒதுக்கியது. இதில் உரிமையாளர்களுக்கு ரூ.51 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சில உரிமையாளர்கள் இழப்பீடு தொகையை உயர்த்தி தர கோரி வாங்க மறுத்து விட்டனர். இதனால் நில ஆர்ஜிதம் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.



மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஓடுபாதையை விரிவுபடுத்த தேவையான நிலங்களை ஆர்ஜிதம் செய்து தேசிய விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஓப்படைத்த பிறகு தான் விரிவாக்க பணிகளை ஆணையம் மேற்கொள்ள முடியும். தற்போது இழப்பீட்டை பெற சில கிராம நில உரிமையாளர்கள் மறுத்து விட்டனர்.




சிலர் நீதிமன்றங்களை அணுகியுள்ளனர். நில ஆர்ஜிதம் தொடர்பாக நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவைகாட்டி இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க அரசும் அறிவுறுத்தியிருக்கிறது. இதனால் நில ஆர்ஜிதம் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-ஆக-201904:38:39 IST Report Abuse
Mani . V அட என்ன பாஸ் நீங்க, சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்காக காவல்துறையை வைத்து மக்களை அடித்து உதைத்து நிலங்களை பிடுங்கியது மாதிரி, இங்கும் செய்ய வேண்டியதுதானே. அதையும் மீறி போராட்டம் செய்தால் வாயிலேயே சுட வேண்டியதுதானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X