ராமநாதபுரம் - பெரியபட்டினம்: மழையில் ஒழுகும் டவுன் பஸ்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
23:32

பெரியபட்டினம் : ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினத்திற்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் மழை பெய்தால் ஒழுகுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.


ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினம் வரை 22 கி.மீ.,க்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழித்தடம் எண் 4 ல் ஏழு பஸ்கள் செல்கின்றன. இதில் ஐந்து பஸ்களின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் ஒழுகுவதால் பயணிகள் மீது மழைநீர் வழிந்தோடுகிறது.இதுகுறித்து பெரியபட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் மஜித் கூறியதாவது:ராமநாதபுரத்தில் இருந்து வாலாந்தரவை, வழுதுார், ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை, பெரியபட்டினம் ஆகிய ஊர்களின் வழியாக செல்லும் 4ம் நம்பர் பஸ்களின் மேற்கூரை முறையாக பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் பஸ்சின் உள்ளே பயணிகள் நனைந்தபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லுாரிக்கு செல்வோர் இந்த பஸ்சில் அதிகளவில் பயணிக்கின்றனர். இதனால் மழை காலங்களில் பஸ்சிற்குள் குடை பிடிக்கும் நிலை தான் உள்ளது.மாவட்டத்தில் அதிகளவு கலெக் ஷன் கிடைப்பதில் முதலிடத்தில் இவ்வழித்தடம் உள்ளது. எனவே மழைக் காலம் நெருங்குவதற்குள் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கூரை சேதமடைந்த பஸ்களை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X