மதுரையை 'சுற்றுலா'ம் வாங்க... விரைவில்... அரசு பஸ்சில் ஜாலி டூர் திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2019
01:56

மதுரை:மதுரை சுற்றுலா தலங்களுக்கு அரசு பஸ்சில் அழைத்துச்செல்லும்

திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், பத்துதுாண் சந்து, தெப்பக்குளம், புதுமண்டபம், விட்டவாசல், அழகர்கோவில், திருப்பரங்குன்றம், சமணர் குகைகள் என பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்கள் பல உள்ளன. மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை தனியார் நிறுவனங்கள் 'ஒரு நாள் சுற்றுலா' என்ற பெயரில் அழைத்துச்சென்று நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இதுபோல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா துறையும் 'உள்ளூர் சுற்றுலா' என்ற பெயரில் ஒரு திட்டத்தை துவக்கியது.

சில மாதங்களிலேயே நிர்வாக காரணத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அத்திட்டத்தை சுற்றுலா துறை கையில் எடுத்துள்ளது.

மாவட்ட சுற்றுலா அலுவலர் சபரி ஸ்ரீபாலமுருகன் கூறியதாவது:

அரசு பஸ்சில் சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச்செல்வது குறித்து போக்குவரத்து கழகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மதுரை மட்டுமின்றி கொடைக்கானல், ராமேஸ்வரத்திற்கும் சுற்றுலா அழைத்துச்செல்லும் திட்டம் உள்ளது.

தவிர, திருமலை நாயக்கர் மகால் ரூ.3 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. கோரிப்பாளையம் தர்காவை சுற்றுலா தலமாக்க உள்ளோம். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வரை இங்கு வருகின்றனர். இதன்காரணமாக அங்கு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை சுற்றுலா துறை சார்பில் மேற்கொள்ள உள்ளோம், என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
06-செப்-201920:33:17 IST Report Abuse
Sampath Kumar வாங்க வாங்க மதுரைக்கு வாங்க வந்து எங்க வைகை ஆற்றை பாருங்க உங்க கூவத்தை மிஞ்சிடும் அப்புரம் மீனாட்சி அம்மன் கோவிலை பாருங்க அசந்து போக மாட்டீங்க அசிங்க பட்டு போவீங்க அப்புறம் திரு பரம் குன்றம் அழகர் கோவில் எல்லாம் போங்க குடிக்க தண்ணீர் கிடாய்காது வண்டி வாகனம் எல்லாம் நிக்க கூட வசதி இருக்காது
Rate this:
Cancel
kumaresan k - madurai,இந்தியா
06-செப்-201910:14:15 IST Report Abuse
kumaresan k பாராட்டுக்கள் . ஆனால் மதுரையை பொறுத்தவரை சுற்றுலா மற்றும் மாநகராட்சி , இரண்டுமே சீசனல் வேலை செய்பவர்கள்.இரண்டுமே மதுரையை சுத்தமாக வைத்துக்கொள்ள பெயரளவில் செயல்படுவார்களே ஒழிய உண்மையாக நிரந்தரமாக செயல்படுபவர்கள் அல்ல . இது மதுரை மக்களுக்கு மிக நன்றாக தெரிந்த உண்மை . ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருமலை நாயக்கர் மஹாலைம் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுவோம் என்று உறுதி அளித்தார்கள் . மஹாலின் உள் சுற்று வளாகத்தில் உள்ள செழுமையான மரங்களை அகற்றி விட்டார்கள் . அதற்கு பதிலாக புதிய மரங்களை நட்டு வளர்க்க ஆவண செய்ய வேண்டும் . மஹாளுக்கு அருகில் பந்தடி முதல் தெருவில் உள்ள குப்பை கிடங்குகளை அகற்றி வேறு இடத்திற்கு சிந்தாமணி ரயில்வே கேட் பக்கம் மாற்ற வேண்டும் . கே கே நகர் , அண்ணா நகரில் உள்ளது போல் ,மஹால் பந்தடி தெருக்களில் தினமும் வீடு வீடாக குப்பை அள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் . பந்தடி முதல் தெருவை சுத்தப்படுத்தி, நோ பார்க்கிங் போர்டு மாட்டி , சிறுநீர் கழிப்பவர்களை அபராதம் விதித்து , லார்ரி போக்குவரத்தை முற்றிலுமாக ரிங் ரோட்டிற்கு மாற்றி மஹால் அருகில் உள்ள பகுதியை வீ ஐ பி ஏரியா வாக மாற்றி மஹால் வெளிப்புற சுற்று சுவர்களை பெயிண்ட் அடித்து , மதுரை மஹாலை சிறந்த சுற்றுலா தலமாக ஆக்கவேண்டும் என்பது மஹாலை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதி மக்களின் கோரிக்கை . இதை மாநகராட்சி செய்தால் இப்பகுதி மக்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகளை பாராட்டுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X