துரிதம்! பெருங்குடியில் 1,000 உறை கிணறுகள் அமைக்கும் பணி... இம்மாதத்திற்குள் மண்டலம் முழுவதும் செயல்படுத்த திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2019
01:21

வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பெருங்குடி மண்டலத்தில், மழை நீர் சேகரிப்பு திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, மண்டலம் முழுவதும், நன்கொடையாளர்கள் உதவியுடன், 1,000 மழை நீர் சேகரிப்பு உறை கிணறுகள் அமைக்கும் பணிகள், துரிதகதியில் நடந்து வருகின்றன.தொடர் மழை காலத்தில், தென்சென்னையின் மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் தான், அதிகம் பாதிக்கப்படுகின்றன.அதுபோன்ற காலகட்டங்களில், குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து விடும். சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படும்.படகுகள் மூலம் மக்களை மீட்க வேண்டிய, அவலநிலை உள்ளது. அதேநேரம், அப்பகுதிகள் சதுப்பு நிலத்தை ஒட்டி இருப்பதால், நிலத்தடிநீர் உப்பு கரிப்பு தன்மை கொண்டதாக உள்ளது. இதனால், கோடையில் ஏற்படும் கடும் தண்ணீர் பற்றாக்குறையையும், சமாளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்தாண்டு கோடையில், தண்ணீர் பஞ்சத்தால் பெருங்குடி மண்டல வாசிகள், மிகவும் பாதிக்கப்பட்டனர்.இப்பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு, மழை நீர் சேகரிப்பு என்பதை மாநகராட்சி உணர்ந்து செயல்பட்டு வருகிறது.அந்த வகையில், பெருங்குடி மண்டலம் முழுவதும், நன்கொடையாளர்கள் உதவியுடன், மழை நீர் தேங்கு பகுதிகளில், 1,000 உறை கிணறுகள் அமைத்து, மழைநீர் சேரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில், தீவிரம் காட்டி வருகிறது.மாநகராட்சியின் பெருங்குடி மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன்கூறியதாவது:பெருங்குடி மண்டலத்தில், மழை நீர் தேங்கும் பகுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அங்கு, 1,000 உறை கிணறுகள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளன.மூன்று அடி விட்டத்தில், 12 அடி ஆழத்திற்கு உறை கிணறுகள் அமைக்கப்படுகின்றன. அதில், சுற்று வட்டார பகுதியில் தேங்கும் மழை நீர் சேகரிக்க வகை செய்யப்படுகிறது.நன்கொடையாளர்கள் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், இதுவரை, 250 உறை கிணறுகள் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இம்மாத இறுதிக்குள், 1,000 உறை கிணறுகள் அமைக்கப்பட்டு விடும்.அதேபோல, மண்டலம் முழுவதும், மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தாத, 1,000 குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அவற்றில், திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, இதுவரை, 455 குடியிருப்புகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை, பெருங்குடி ஆகிய பகுதிகளில், பயன்பாடின்றி காணப்படும், ஐந்து பொது கிணறுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அவற்றில், தலா, மூன்று லட்சம் ரூபாய் செலவில், பிரமாண்ட மழை நீர் சேகரிப்பு மையமாக உருவாக்கும் பணி நடந்து வருகிறது.இது இல்லாமல், மண்டலம் முழுவதும் உள்ள, 36 பயன்பாடுள்ள பொது கிணறுகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிலும் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மேலும், பயன்பாடு இல்லாமல் உள்ள ஆழ்துறை கிணறுகள், அரசு பள்ளிகள், மாநகராட்சி, அரசு கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம்ஆகியவை, குடிநீர் வாரியத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன.இத்திட்டங்கள் மூலம் பெருங்குடி மண்டலத்தில், நிலத்தடிநீர் மட்டம் நிச்சயம் உயரும்.இவ்வாறு, அவர் கூறினார்.


நன்கொடையாளர்கள் வரவேற்பு


பெருங்குடி மண்டலத்தில், 1,000 உறை கிணறுகள் அமைக்கும் திட்டம், நன்கொடையாளர்களால் நிறைவேற்றப்படுகிறது. ஓர் உறை கிணறு அமைக்க, 15 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.எனவே, சமூக நல விரும்பிகள், நன்கொடையாளர்கள், பொது நலச்சங்கத்தினர் இத்திட்டத்தை முழுமை அடைய செய்ய வேண்டும். அவர்கள் நிதியாகவோ, பொருட்களாகவோ வழங்கலாம் என, மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
10-செப்-201905:26:06 IST Report Abuse
Anandan . .....
Rate this:
Cancel
gopal -  ( Posted via: Dinamalar Android App )
09-செப்-201908:29:09 IST Report Abuse
gopal Iron cover should be d with the cement jolly. To avoid frequent expense for which only this design done by the pwd engineers ( wrongengineers )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X