பள்ளியில் 'லேப்டாப்' திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2019
05:48

பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கியது போக மீதம் உள்ள, 19, 'லேப்டாப்'கள் தலைமையாசிரியர் அறையில் வைக்கப்பட்டு இருந்தது.கடந்த, 6ம் தேதி வழக்கம் போல பள்ளியை பூட்டி விட்டு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சென்றனர். நேற்றுமுன்தினம் மீண்டும் பள்ளிக்கு வந்து போது, தலைமையாசிரியர் அறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன், அறையில் இருந்த, ஆறு 'லேப்டாப்'கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் (பொ) வேல்விழிஞானம், 52, கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.காரில் 'லேப்டாப்'கள் திருட்டுகேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் வினோத், 29. தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.இவர், கடந்த, 4ம் தேதி பொள்ளாச்சிக்கு தொழில் நிமித்தமாக வந்து, பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு திரும்பியுள்ளார். அப்போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மூன்று 'லேப்டாப்'கள், 25 ஆயிரம் ரூபாய் பணம், ஏ.டி.எம்., கார்டு, வங்கி கணக்கு புத்தகம் திருட்டு போயிருந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்றவர் கைதுநெகமம், வடசித்துார் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற நெகமம் போலீசாரை கண்ட நபர் ஓட்டம் பிடித்தார்.அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்த போது, தாராபுரத்தை சேர்ந்த ஹக்கீம், 30, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த நெகமம் போலீசார், அவரிடம் இருந்து, 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.தவறி விழுந்த தொழிலாளி பலிகோவை மதுக்கரை, க.க.சாவடியை சேர்ந்தவர் சங்கர், 37. இவர் கடந்த, 5ம் தேதி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள எலக்ட்ரானிக் கடை முதல் மாடியில் நின்று பிளக்ஸ் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது, தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X