சென்னை:சென்னையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்க, மாணவ -- மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சார்பில், மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், இந்தாண்டிற்கான, சைக்கிள் போட்டி, 15ம் தேதி நடக்கிறது. இதில், 13, 15 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில், மாணவ -- மாணவியருக்கு போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில் பங்கேற்க விரும்பும், மாணவ -- மாணவியர், சொந்த சைக்கிளுடன் போட்டி நாளன்று, காலை, 6:30 மணிக்கு ஆஜராக வேண்டும்.இதில் பங்கேற்க, இந்தியாவில் தயாரான சைக்கிள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும், முதல், மூன்று இடங்களை பெறுவோருக்கு, பரிசும், முதல், 10 இடம் பெறுவோருக்கு, தகுதி சான்றிதழ்களும் வழங்கப்படும்.