| தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதி எது மழைநீரை சேமிக்க மாநகராட்சி புதிய ஏற்பாடு Dinamalar
தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதி எது மழைநீரை சேமிக்க மாநகராட்சி புதிய ஏற்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 செப்
2019
06:26



மதுரை, மதுரை நகரில் தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களை கண்டறிந்து அங்கு மழைநீரை சேகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மாநகராட்சி பகுதியில் 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தின் கீழ் மழைநீர் சேமிப்பு, நீர்நிலைகளை மேம்படுத்துதல் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள், வணிகர்கள், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, திருமண மண்டப உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.அதில் கமிஷனர் விசாகன் பேசியதாவது: இன்று வீடுகளில் மழைநீரை சேமித்தாக வேண்டிய நிலை. எனவே தான் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கி உள்ளோம். ஆண்டு தோறும் மழைநீரை சேகரித்தால் தட்டுப்பாடின்றி குடிநீர் பெறலாம். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இதுவரை மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்காதவர்கள் உடனடியாக அமைக்க வேண்டும். நகரில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்க உள்ளோம். இதற்காக 20 அடி ஆழ போர்வெல் அமைத்து பூமிக்கு அடியில் தண்ணீர் கொண்டு செல்லப்படும். முதலில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 33 நீர்நிலைகளை மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்படும். 8 நீர்நிலைகளை ரூ.1.04 கோடியில் துார்வார தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது. எஞ்சிய நீர்நிலைகளுக்காக தனியார் நிறுவனங்களின் உதவியை நாடி உள்ளோம், என்றார்.முன்னதாக மழைநீர் கட்டமைப்பு ஆலோசகர் அறிவுமணி மழைநீர் சேகரிப்பு திட்டம், முறைகள் குறித்து விளக்கினார். நகர் பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி கமிஷனர்கள் பிரேம்குமார், முருகேசபாண்டியன், விஜயா, பி.ஆர்.ஓ., சித்திரவேல், உதவி நகர்நல அலுவலர் இஸ்மாயில் பாத்திமா பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X