சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடு இல்லாவிடில் தப்பிக்க முடியாது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடு இல்லாவிடில் தப்பிக்க முடியாது
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 செப்
2019
02:25

கோவை:சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளை, மாதாந்தோறும் அறிக்கையாக சமர்ப்பிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



கல்வியாண்டு துவங்கும்போது, பள்ளிகளில் பாடத்திட்டங்களை செயல்படுத்துவதைபோல், கல்விசாரா மன்ற செயல்பாடுகளும் மேற்கொள்ள வேண்டும். சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், பசுமை படை உள்ளிட்ட மன்றங்களை, ஜூன் மாதத்திலேயே துவக்கி, அறிக்கை தயாரிப்பது வழக்கம்.சுற்றுச்சூழல் மன்றம் உள்ள பள்ளிகள், வளாகத்துாய்மை, சுற்றுப்புறம் பராமரித்தல், மரக்கன்று நடுதல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும்.



சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளை மாதந்தோறும் புகைப்படங்களுடன் அறிக்கை தயாரித்து அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில், வரும், 16ம் தேதி, ஓசோன் தினம் கடைபிடிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாதாந்திர அறிக்கையை, ecocbe15@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் சமர்ப்பிக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X