பேரூர்:ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு, நமது நாளிதழில் வெளிவந்த செய்தி காரணமாக, இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புவழங்கப்பட்டது.
பேரூர் அடுத்த வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள்,85; இட்லி கடை நடத்துகிறார். இவர், பல ஆண்டுகளாக, ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து, ஏழை எளியோருக்கு சேவை செய்து வருகிறார். இவரது சேவை குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. அவருக்கு பலரும் உதவி செய்ய முன்வந்தனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஸ்ரீஅன்னை அரவிந்த் காஸ் நிறுவனம் சார்பில், சமையல் காஸ் அடுப்பு வழங்கப்பட்டது. மேலும், 19 கிலோ, 5 கிலோ கமர்சியல் சிலிண்டர்களும்நேற்று வழங்கப்பட்டன. விறகு அடுப்பில் புகையின் நடுவே தவித்து வந்த, 'ஒரு ரூபாய் இட்லி பாட்டி'க்கு சுவாசப் பிரச்னையில் இருந்து விடிவு கிடைத்திருக்கிறது