ஆரம்பம்!செம்பரம்பாக்கம் ஏரி துார் வாரும் பணி பூஜையுடன்...கூடுதலாக 56.50 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்...எட்டு ஆண்டுகளில் 1 மீ., ஆழப்படுத்த திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 செப்
2019
03:49
பதிவு செய்த நாள்
செப் 12,2019 03:30

குன்றத்துார்:சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான, செம்பரம்பாக்கம் ஏரியை, துார் வாரி, ஆழப்படுத்தும் பணி, பூமி பூஜையுடன், நேற்று துவங்கியது. எட்டு ஆண்டுகள் நடைபெற உள்ள இந்த பணியால், அரசுக்கு, 191.27 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.



சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. இது, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மொத்தம், 3,800 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இதில், 3.63 டி.எம்.சி., நீரை சேமித்து வைக்க முடியும். இந்த நீரை வைத்து, சென்னையின், 100 நாள் குடிநீர் தேவையை, எளிதாக பூர்த்தி செய்ய முடியும். பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால், ஏரியின் கொள்ளளவு, 40 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகள்அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வில், இந்த தகவல் தெரியவந்துள்ளது.இதுமட்டுமல்லாமல், செம்பரம்பாக்கம் ஏரியின் நீரை நம்பி, 38 கிராமங்களில், விவசாயம் நடந்து வந்தது.குடிநீர் தேவைக்காக, ஏரி நீர் பயன்படுத்துவதால், தற்போது, திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்துார் ஆகிய பகுதிகளில், 1,000 ஏக்கர் விவசாயத்திற்கு மட்டுமே, தண்ணீர் வழங்கப்படுகிறது.



கடந்தாண்டு, வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால், நீர்வரத்தின்றி, செம்பரம்பாக்கம் ஏரியில், நீர்மட்டம் குறைவாகவே இருந்தது.மெல்ல மெல்ல தண்ணீரின் அளவு குறைந்ததால், ஏப்., 2ம் தேதி முதல், சென்னைக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு கிடக்கும் நிலையில், துார் வாரும் பணிகளை துவக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை எழுந்து வந்தது.நிதித்துறை அனுமதி பெறுதல் உள்ளிட்ட காரணங்களால், இப்பணிகள் தாமதமாகி வந்தன. இந்நிலையில், 15 ஆண்டுகள் கழித்து, செம்பரம்பாக்கம் ஏரி, முழுமையாக வறண்டதால், துார் வாரி, ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டது.ஒரு வழியாக, இந்த பணிகளுக்கு, ஜூன் மாதம் அனுமதியும் கிடைத்தது.தொடர்ந்து, அளவீடு கற்கள் நடுதல் உள்ளிட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டு, ஏரியை துார் வாரும் பணி, பூமி பூஜையுடன், நேற்று துவங்கியது. வருமானம்ஏரியை துார் வாரும் தனியார் நிறுவனம் மூலம், அரசுக்கு, 191.27 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஏரியை துார் வாரும் பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், கொசஸ்தலை வடிநில கோட்ட செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், செம்பரம்பாக்கம் உதவி பொறியாளர், சத்திய நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஏரியின் அடிமட்ட அளவிற்கு மேல் தேங்கியுள்ள, உபரி மண் முழுமையாக அகற்றப்படும். இது, இடத்திற்கு ஏற்றார் போல் மாறுபடும். அதாவது, சில இடங்களில், 3 அடியிலும், சில இடங்களில், 5 அடியிலும் மண் தேங்கியிருக்கும். சில இடங்களில், சுத்தமாக மண் தேங்கியிருக்காது. அந்த இடங்களில், துார் வாரப்படாது. அதேநேரத்தில், மற்ற இடங்களில், அடிமட்ட அளவிற்கு துார் வாருவர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள்1 மீட்டர் துார் வார முடிவுசெம்பரம்பாக்கம் ஏரியை, துார் வாரி, ஆழப்படுத்த, கடந்தாண்டு, அரசாணை வெளியிடப்பட்டது.


இத்திட்டத்தின் படி, 6,303 ஏக்கர் பரப்பளவிற்கு, 1 மீட்டர் ஆழத்திற்கு துார் வாரப்படும்.இப்பணி, எட்டு ஆண்டுகள் நடைபெறும். மொத்தம், 25.30 லட்சம் லோடு மண் வெளியேற்றப்படும். ஒரே நேரத்தில், முழு பரப்பளவிலும், துார் வார முடியாது என்பதால், பகுதி பகுதியாக பணி மேற்கொள்ளப்படும்.இப்பணியால், 536 மில்லியன் கன அடி கொள்ளளவு மீட்கப்படும்.இதன் மூலம், கூடுதலாக, 56.50 கோடி லிட்டர் தண்ணீரை தேக்கலாம். மேலும், உபரி நீரை உடனுக்குடன் வெளியேற்றுவதை தடுக்கலாம். கோடையில், கூடுதலாக சில மாதங்கள், சென்னைக்கு தண்ணீர் வழங்க முடியும்.


கனிம வளத்துறை திடீர் எதிர்ப்பு


காலை முதல் லாரிகளில் மண் எடுத்து செல்லப்பட்ட நிலையில், பிற்பகலில், காஞ்சிபுரம் மாவட்ட கனிமவளத் துறையினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குன்றத்துார் அருகே சென்ற இரண்டு மண் ஏற்றிய லாரிகளை மடக்கிய கனிமவளத்துறை உதவி இயக்குனர், பெருமாள்ராஜன், லாரிகளை சிறைபிடித்துள்ளார்.ஏரிகளில் மண் அள்ளுவதற்கு, பொதுப்பணித்துறை அனுமதி மட்டும் செல்லாது. கனிமவளத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் எனக் கூறி, குன்றத்துார் போலீசிலும் அவர் புகார் கூறியுள்ளார். இதையடுத்து துார் வாரும் பணிகளுக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை விழுந்துள்ளதால், பொதுப்பணித் துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை விரைவில் துவங்கவுள்ள நிலையில், இந்த பிரச்னையில் முதல்வர், இ.பி.எஸ்., தலையிட்டு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-201914:54:02 IST Report Abuse
ஆப்பு இம்பூட்டு மழைபெஞ்சும் ஒரு சொட்டு தண்ணியக் காணோமே? என்னத்த தூர் வாரி...?
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-201912:06:57 IST Report Abuse
Swaminathan Nath இது எப்போதோ செய்து இருக்க வேண்டுய வேலை, நட்டு நலன் கருதி உடன் செய்யுங்கள்,
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-செப்-201910:46:50 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அரசு அதிகாரிகளுக்கும் போட்டி. கனிம வளத்துறை இவ்வளவு நாள் தூங்கியதா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X