thanjai district | பெற்றோர் திட்டியதால்சிறுவன் தற்கொலை | தஞ்சாவூர் செய்திகள் | Dinamalar
பெற்றோர் திட்டியதால்சிறுவன் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மே
2011
01:38

தஞ்சாவூர்: திருவையாறு அடுத்த பெரும்புலியூர் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் கென்னடி மகன் பூபாலன் (16). இவர் திருவையாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். இவர் நேற்று சைக்கிளில் திருவையாறு கடைத்தெருவுக்கு வந்தார். சைக்கிள் சாவியை தொலைத்ததால், பூட்டை உடைத்து சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். பூட்டை உடைத்தது குறித்து பெற்றோர் கண்டித்தனர். மனமுடைந்த பூபாலன், பூச்சி மருந்து குடித்து இறந்தார்.திருவையாறு போலீஸார் விசாரிக்கின்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X