thanjai district | தொடர் மின் வெட்டால் சிறு, குறு தொழில் பாதிப்பு:சீரமைக்க தொழிற் சங்கத் தலைவர் வேண்டுகோள் | தஞ்சாவூர் செய்திகள் | Dinamalar
தொடர் மின் வெட்டால் சிறு, குறு தொழில் பாதிப்பு:சீரமைக்க தொழிற் சங்கத் தலைவர் வேண்டுகோள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மே
2011
01:38

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் தலைவர் மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நிலவி வரும் மின்வெட்டினால் சிறு மற்றும் குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்சாரத்தையே நம்பியுள்ள தொழில்களில் மின்வெட்டினால் உற்பத்தி பாதிக்கப்பட்டு பணியாளர்களுக்கும் வேலையின்றி சம்பளம் வழங்கி இரட்டிப்பு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.பொருளாதார மந்த நிலையில் இருந்து சிறிது, சிறிதாக விடுபட்டு வரும் இத்தொழில் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு பேர் அடியாக அமைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் மூன்று மணி நேர மின்வெட்டு மட்டுமல்லாமல் அறிவிப்பு ஏதுமின்றி மேலும் ஒரு மணி நேர மின்வெட்டினால் தொடர்ந்து மின்சாரம் தேவைப்படும் உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. உருக்காலைகள், பிளாஸ்டிக், வார்ப்பகம், ரப்பர் பட்டைகள் போன்ற உற்பத்தி நிறுவனங்களில் சூடேற்றி இயந்திரங்களுக்கு தொடர்ந்து மின்சாரம் தேவைப்படுவதால் அறிவிப்பின்றி அடிக்கடி ஏற்படுகின்ற மின்தடையினால் உற்பத்தி முன்னதாக சூடேற்றியது பாதிக்கப்பட்டு மீண்டும் தொடக்கத்தில் இருந்து உற்பத்தி முறையைச் செயல்படுத்த வேண்டியுள்ளது. கோரிக்கைகளை அரசு ஏற்று மின்வெட்டு ஏற்படாமலும், வேலைவாய்ப்பை பெருக்கி வரும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் நலிவடைந்து வேலையின்மை ஏற்படுவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும்.


 

Advertisement
மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X