thanjai district | காவிரி ஆற்றில் மணல் அள்ளிய2 மாட்டு வண்டிகள் பறிமுதல் | தஞ்சாவூர் செய்திகள் | Dinamalar
காவிரி ஆற்றில் மணல் அள்ளிய2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மே
2011
01:39

கும்பகோணம்: கும்பகோணம் தாசில்தார் காமராஜ் உத்திரவுப்படி வருவாய் ஆய்வாளர் சிவானந்தம், கொட்டையூர் கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன், கிராம உதவியாளர்கள் சந்திரகாசன், அனந்தராமன், மதியழகன், துரை, முருகானந்தம் ஆகியோர் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொட்டையூர் காவிரி ஆற்றில் இருவர் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்தது தெரியவந்தது. வருவாய் துறையினர் அந்த இடத்துக்கு சென்றபோது ஒருவர் மாட்டு வண்டியை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இன்னொருவர் வலையப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மாட்டு வண்டியையும், மற்றொரு மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் தாலுகா அலுவலகத்தில் கொண்டு வந்தனர்.இதுதொடர்பாக தாசில்தார் காமராஜ் மேல் நடவடிக்கைக்காக கும்பகோணம் ஆர்டிஓ அசோக்குமாருக்கு பரிந்துரைத்துள்ளார்.


 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X