| போலீஸ் செய்திகள் Dinamalar
போலீஸ் செய்திகள்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

15 செப்
2019
01:40
பதிவு செய்த நாள்
செப் 15,2019 01:39

பள்ளி மாணவிகள் இருவர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் இருவேறு சம்பவங்களில் பள்ளி மாணவிகள் இருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.


ஸ்ரீவில்லிபுத்துார் ரைட்டன்பட்டியை சேர்ந்தர் வைத்தீஸ்வரி,13. நகராட்சி திரு.வி.க.,பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தாய், தந்தை இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதால் வேதனையடைந்த வைத்தீஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுண் எஸ்.ஐ.,கருத்தபாண்டி விசாரித்தார்.


* மம்சாபுரம் அண்ணாமலை தெருவை சேர்ந்தவர் வேணுபிரியா 13. நாகம்மாள் பெண்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து மம்சாபுரம் எஸ்.ஐ.,ரமேஷ் விசாரிக்கிறார்.

இளம்பெண் மாயம்

விருதுநகர்:விருதுநகர் முதலிபட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் 43. பயர் ஆபிஸில் மகளும் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 11 ம் தேதி வயிற்று வலி என்பதால் மகள் வீட்டில் இருந்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது மகளை காணவில்லை. அதே கம்பெனியில் வேலை பார்த்த சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த ரகுபதிராஜா கடத்தியிருப்பார் என முத்துக்குமார் அளித்த புகாரின்படி வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தற்கொலை


சிவகாசி:சிவகாசியைசேரந்தவர் சந்தனகுமார் 30. ஏ.சி., மெக்கானிக்கான இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மனமுடைந்த சந்தனகுமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி போலீசார் விசாரிக்கின்றனர்.


டிராக்டர் மோதி தொழிலாளி பலி

சாத்துார்:விழுப்புரம் மாவட்டம் மேலமங்களத்தை சேர்ந்தவர் விஜயரங்கன் 58. திருவாரூரை சேர்ந்தவர் சங்கர் 50. இருவரும் ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். சாத்துார் வைப்பாறு ரயில்வே பாலத்தில் நடந்து வரும் புதிய தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கூடராம் போட்டு தங்கியிருந்தனர்.


நேற்று காலை 8:00 மணிக்கு விஜயரங்கன் பாத்திரம் கழிவு கொண்டிருந்தார். அப்போது சங்கர், அங்கு நின்றிருந்த டிராக்டரை ரிவர்சில் எடுத்த போது எதிர்பாராமல் விஜயரங்கன் மீது மோதியது. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இறந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X