வளாகத்திலே தேங்கிய கழிவுநீர்; போதிய பதிவு மையம் இன்றி தவிப்பு நோயாளிகளை தவிக்கவிடும் விருதுநகர் மருத்துவமனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2019
01:46

விருதுநகர்:விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீர் , வெளிநோயாளிகள் பிரிவில் சீட்டு பதிவிற்கு இரு கவுன்டர்கள் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் என நோயாளிகள் பாதிப்பை சந்திக்கின்றனர்.



இம்மருத்துவமனைக்கு சுற்று பகுதியினர் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து 450 க்கு அதிகமான உள்நோயாளிகளும், நாள்தோறும் 1,500 க்கு அதிகமான வெளிநோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.


இம்மருத்துவமனையை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த கடந்த 5 ஆண்டுகளாக பணி நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் தரம் மட்டும் இன்றுவரை உயர்ந்தபாடில்லை. மருத்துவ கல்லுாரியை கொண்டு வர இதுவரை எவரும் முயற்சி செய்யதாததால் அடிக்கடி மதுரை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கே இருதய, நரம்பு நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு மக்கள் செல்லும் நிலை உள்ளது.


மருத்துவ கல்லுாரி இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லுாரிக்கு இணையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அரசு அறிவித்தும் இன்று வரை விருதுநகர் தலைமை மருத்துவமனையில்மருத்துவ கல்லுாரி வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. பேன்கள் கூட இயங்காததால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.


மருத்துவமனையின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. மருத்துவமனை வளாகத்திலேயே கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இங்கிருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் நோயாளிகளை பாடாய்ப்படுத்துகிறது. மருத்துவகழிவுகள் வளாகத்திற்குள்ளே கொட்டப்பட்டு வருகிறது. அவற்றை முறையாக அப்புறப்படுத்தவில்லை.


அரசு மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. முதல் முதலாக வரும் வெளிநோயாளிகளுக்கு பெயர், வயது, ஊர் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய சீட்டுப்பதிவு நடைமுறையில் உள்ளது. இதற்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக கவுன்டர் இயங்கி வருகிறது. ஆனால் இங்கு வரும் நோயாளிகளுக்கு ஏற்ப கவுன்டர்கள் போதிய அளவில் இல்லை. முதியவர்கள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டியுள்ளது.


மேலும் டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் வெளிநோயாளிகள் பிரிவில் மக்கள் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர். இரவு நேரங்களிலும் டாக்டர் பற்றாக்குறையால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.


டாக்டர்கள் பற்றாக்குறை இல்லை





வெளிநோயாளிகள் பிரிவில் சீட்டு பதிய ஆண்கள், பெண்கள் என தனித்தனியே கவுன்டர்கள் உள்ளது.தற்போது கர்ப்பிணிகளுக்கு என தனியாக ஒரு கவுன்டர் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து குழந்தைகள் என தனியாக ஒரு கவுன்டர் திறக்க ஏற்பாடு செய்யப்படும். அதன்பின் ஒவ்வொரு நோய் பிரிவிற்கு ஆங்காங்கே சீட்டுப்பதிவு செய்ய கவுன்டர்கள் துவங்கப்படும். தற்போது புதிதாக 10 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 46 பேர் தற்போது 10 என 56 டாக்டர்கள் போதிய அளவில் உள்ளனர். டாக்டர்கள் பற்றாக்குறை தற்போது இல்லை.


-பிரகலாதான், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர், விருதுநகர்


குறுகலான இடத்தில் மருந்து






காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். காலை 7:30 மணிக்கே வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவினை செயல்பட செய்ய வேண்டும். நோயாளிகள் நிலை கருதி கூடுதல் சீட்டுப்பதிவு கவுன்டர்கள் திறக்கப்பட வேண்டும்,


நோயாளிகள் வரிசையாக அமர்ந்து சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக அனைத்து இடங்களிலும்
இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். மருந்து, மாத்திரைகள் வழங்கும் பிரிவு குறுகலான இடத்தில் இருப்பதால் நோயாளிகள் மருந்து மாத்திரை வாங்க இடையூறாக உள்ளது.இங்குள்ள சில கட்டடங்கள் எதற்கும் பயனில்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அவற்றை இடித்து அப்புறப்படுத்துவதும் அவசியமாகிறது.\


-பாலமுருகன், தனியார் ஊழியர், விருதுநகர்

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X