| குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு Dinamalar
குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2019
01:55

காரியாபட்டி:காரியாபட்டி பேரூராட்சி குடிநீர் சப்ளைக்கான ஆழ்துளை கிணறு அமைக்க கட்டுக்குத்தகை கரிசல்குளம் பகுதியை யொட்டிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


காரியாபட்டி பேரூராட்சி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.118 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையடுத்து. ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி எல்கைக்கு உட்பட்ட கட்டுக்குத்தகை கரிசல்குளம் அருகே ஓடும் குண்டாற்றை யொட்டி ஆழ்துளை அமைக்க முடிவு செய்யப்பட்டது.



இதை அறிந்த 7, 8 வது வார்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாசில்தார் ராம்சுந்தர், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், செயல் அலுவலர் மோகன்கென்னடி பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பிட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கவிடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் கலைந்து சென்றனர்.



முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார்,''குண்டாற்றிலிருந்து இரு ஆழ்துளை கிணறு அமைத்து எங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அருகில் ஆழ்துளை கிணறு அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து சப்ளை பாதிக்கும். பொதுவாகவே தண்ணீர் சப்ளை சரிவர இல்லை. தாமிரபரணி குடிநீர் சப்ளையும் 8 மாதங்களாக இல்லை. குடிநீரை விலைக்கு வாங்குகிறோம். இதைகருத்தில் கொண்டு எங்கள் பகுதியில் அமைக்க வேண்டாம் என்கிறோம். ஆழ்துளை கிணற்றிலிருந்து 2 கி.மீ., சுற்றளவை தாண்டி எங்கேயாவது ஆழ்துளை போடட்டும், ''என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X