துார் வாரப்பட்ட குளங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

15 செப்
2019
07:08
பதிவு செய்த நாள்
செப் 15,2019 06:49

திருவள்ளூர்:'மும்மாரி' திட்டத்தின் கீழ், தன்னார்வலர்களால் துார் வாரப்பட்ட குளங்களின், கரையில், மரக்கன்று நடும் திட்டத்தை, திருவள்ளூர் கலெக்டர் துவக்கி வைத்தார்.


திருவள்ளூர் மாவட்டத்தில், நீர்நிலைகளை துார் வார, தன்னார்வலர்கள் இணைந்து, 'மும்மாரி' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 140 ஏரி, குளங்கள் துார் வார, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், 60 பேர், குளங்களை துார் வார, அனுமதி கேட்டு விண்ணப்பித்துஉள்ளனர்.துார் வார அனுமதி அளிக்கப்பட்ட குளங்களில், இதுவரை, 25 நீர்நிலைகள் முழுமையாக பணி நிறைவடைந்து உள்ளது. இடையில், இரண்டு வாரமாக, மழை பெய்து வருவதால், துார் வாரும் பணியில், இடையூறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், துார் வாரும் பணி நிறைவடைந்த ஏரி, குளங்களில், மரக்கன்று நடும் திட்டம் நேற்று, வேப்பம்பட்டு, திருக்கண்டீஸ்வரர் கோவில் குளத்தில் துவங்கியது. முன்னாள் அமைச்சர் ரமணா முன்னிலை வகித்தார்.


கலெக்டர் மகேஸ்வரி, மரக்கன்றினை நட்டு, திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், நீர்நிலைகளை துார் வாரும் திட்டத்திற்கு, தன்னார்வலர்கள், பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு அளித்து வருகின்றனர். இப்பணி நிறைவடைந்தால், மழை நீர் சேகரமாகி, நிலத்தடி நீர் மட்டம் உயரும்; இந்த குளத்தில், புங்கன், வேம்பு, நாக மரக்கன்று நடப்படும். இத்துடன், 600 பனை விதைகளும் நடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பின், அருகில், அடர் மரக்கன்று நடும் திட்டத்தில், 100 மரக்கன்று நடும் திட்டத்தையும், கலெக்டர் துவக்கி வைத்தார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X