ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2019
06:53

திருவள்ளூர்: 'வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்கியது.இந்திய அளவில், செப்டம்பர் மாதம், தேசிய ஊட்டச்சத்து மாதமாக 'வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு' என, கொண்டாடப்படுகிறது.இதன் மூலம், வளர் இளம் பெண், கர்ப்பிணி, 0 - 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர்.திருவள்ளுர் மாவட்டத்தில், குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம், ஊட்டச்சத்து விழிப்புணர்வு செய்ய, ரத்த சோகை, வயிற்று போக்கு, தன் சுத்தம் மற்றும் கை கழுவும் முறை, ஊட்டச்சத்து முறை ஆகிய ஐந்து தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும், பேச்சு, கட்டுரை, ஓவிய, கோலம் போன்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், நடத்தப்பட உள்ளன.இத்தகவலை திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி


திருவள்ளூர்: பள்ளி மாணவர்களுக்கு, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ் வளர்ச்சி துறையின் மூலம், குறள் பரிசு திட்டத்தின் கீழ் திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்படும்.வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இந்த ஆண்டிற்கான, போட்டி, அக். 11ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் இதர விபரங்களை, பட்டியலில் தாங்களாகவே சரி பார்த்துக் கொள்ளலாம். இதற்காக, www.nvsp.in என்ற இணையதள வழியாகவும், 1,950 கட்டணமில்லா தொலைபேசி எண் ஆகிய பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.இதன்படி வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து, வாக்காளர்களின் பெயர், பிறந்த தேதி, வயது உள்ளிட்ட விபரங்களை சரி பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். திருத்தங்கள் இருந்தாலும், அதை சரி செய்து கொள்ளலாம். இதனால், செம்மையான, தவறுதல்கள் ஏதுமற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்க இயலும்.இத்தகவலை, திருவள்ளூர் கலெக்டர்மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X