| பிரிந்த தம்பதியை சேர்த்தது மக்கள் நீதிமன்றம் Dinamalar
பிரிந்த தம்பதியை சேர்த்தது மக்கள் நீதிமன்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2019
06:56

திருத்தணி:திருத்தணியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், இரண்டு ஆண்டுகளாக பிரிந்த தம்பதியை ஒன்று சேர்ந்தனர். மேலும், 250 வழக்குகளுக்கு தீர்வு கண்டு, 1.89 கோடி ரூபாய் இழப்பீடு தொகை பெற்று, பயனாளிகளுக்கு தரப்பட்டது.


திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி, திருத்தணி சார்பு நீதிபதி உமா தலைமையில் நேற்று நடந்தது.மொத்தம், 1,100 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 250 வழக்குகள் முடிக்கப்பட்டன.அதாவது, 205 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு கண்டு, 1 கோடியே, 80 லட்சத்து, 52 ஆயிரம் ரூபாய், அபராத வழக்குகளில், 56 ஆயிரத்து, 600 ரூபாய் பயனாளிகளுக்கு பெற்று தரப்பட்டது.மேலும், 10 வங்கி வழக்குகளில், 6 லட்சத்து, 79 ஆயிரத்து, 500 ரூபாய், என, மொத்தம், ௧ கோடியே, 89 லட்சத்து, 88 ஆயிரத்து, 106 ரூபாய் இழப்பீடு தொகை பயனாளிகளுக்கு பெற்று தரப்பட்டது.குறிப்பாக, திருத்தணி, காமராஜர் நகரைச் சேர்ந்த கோபிநாதன்- - லோகநாயகி என்ற தம்பதியை, இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இவர்கள், மக்கள் நீதிமன்றத்தில், ஒன்று சேர்ந்தனர். நிகழ்ச்சியில், நீதிமன்ற தலைமைஎழுத்தர் ராமமூர்த்தி, மூத்த வழக்கறிஞர்கள் விஜயகுமார், காத்தவராயன், கமலக்கண்ணன் உட்பட, 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X