ஆர்.கே.பேட்டை:ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் குவாரிக்காக, தமிழகத்தில், டெட்டனேட்டர்களை பதுக்கி வைத்திருந்ததை, வருவாய் துறையினர், 'சீல்' வைத்து முடக்கினர்.
இது தொடர்பாக, குவாரி மேலாளரை, போலீசார் நேற்று கைது செய்தனர்; உரிமையாளரை தேடி வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் அருகே, பாறை குவாரி செயல்பட்டு வந்தது. இதற்கான வெடிபொருட்கள் மற்றும் கிரஷர், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அமைந்திருந்தது.ஆர்.கே.பேட்டை வருவாய் துறையினர், வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த கிடங்கிற்கு, சீல் வைத்தனர்.குவாரியின் மேலாளர் வேணு, 26, என்பவரை ஆர்.கே.பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்; உரிமையாளர் பெருமாள் என்பவரை தேடி வருகின்றனர்.