அளவீடு! ஈஞ்சம்பாக்கத்தில் மாயமான குளங்கள்... வீடு, வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு...14 ஏக்கர் பரப்பு காலியானது அம்பலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
01:05

சென்னை:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில், போலி ஆணவங்கள் வழியாக ஆக்கிரமிக்கப்பட்ட, 14 ஏக்கர் பரப்பு கொண்ட குளங்களை மீட்கும் பணியை, வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி இணைந்து மேற்கொண்டு வருகிறது.



தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஆக்கிரமிப்பால் சீரழிந்து போன நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும் என, பொதுமக்கள் முதல் நீதிமன்றங்கள் வரை, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.நீர்நிலைகளை துார் வார, மக்கள் முன்வர வேண்டும் என, நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதனால், பொதுமக்கள் தானாக முன்வந்து, நீர்நிலைகளை சீரமைத்து வருகின்றனர்.மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர். சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில், 1938ம் ஆண்டு வருவாய் ஆவணப்படி, 16 குளங்கள் இருந்தன.இவற்றில், நான்கு குளங்களை, மாநகராட்சி பராமரித்து வருகிறது. மீதமுள்ள குளங்கள், போலி ஆவணங்கள் வழியாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இந்த குளங்களை மீட்டெடுக்க வேண்டும் என, நம் நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியானது.


இதை தொடர்ந்து, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர், பொன்.தங்கவேல் என்பவரும், குளங்களை மீட்டெடுக்க, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.இதையடுத்து, சோழிங்கநல்லுார் தாசில்தார், பிரபாகரன் தலைமையில், 32 வருவாய் அதிகாரிகள் மற்றும் ஏழு மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து, குளங்கள் இருந்த இடங்களை தேடினர்.வருவாய் ஆவணப்படி, ஒவ்வொரு குளமும், எவ்வளவு பரப்பளவில் இருந்தன என, அளக்கப்பட்டது. மேலும், குளத்தின் தற்போதைய நிலை மற்றும் அதில் உள்ள கட்டுமானங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.


இதில், ஏழு குளங்களில், வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. ஆறு குளங்கள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள குளங்களில், தடுப்பு சுவர் கட்டி, ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு குளமும், 25 - 50 சென்ட் பரப்பளவு கொண்டவை. மொத்தம், 14 ஏக்கர் பரப்பளவில், குளங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது தெரியவந்தது.அளந்து நிர்ணயம் செய்த குளங்களின் விபரங்களை, நீதிமன்றம் மற்றும் மாநகராட்சி வசம் ஒப்படைக்க, வருவாய்த்துறை முடிவு செய்து உள்ளது. இதையடுத்து, குளங்களை மீட்டெடுத்து பாதுகாக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
21-செப்-201908:38:51 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj என்ன ஆபா சமான கருத்து இப்படியெல்லாம் சொல்லி தடுத்து நிறுத்துவோரை காணும் கடவுள் சும்மா இருக்க மாட்டார் நான் எழுதியுள்ள கருத்துருக்கள் பிரசுரிக்க தடையினை ஏற்படுத்துவோரை உங்களது நிர்வாகத்திலிருந்து துரத்துங்கள் அவர் திருந்தவில்லையென்றால் வட்டியும் முதலுமாக அவருக்கு இழப்புகள் ஏற்பட்டு அவர்தான் கஷடப்படவேண்டியதிருக்கும் அவரை திருத்தவில்லையென்றால் தினமலர் தினமும் மலர முடியாமல் போய்விடும் உண்மைகளை மறைக்கிறவன் வாழ்வடையமாடடான்
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
16-செப்-201923:36:19 IST Report Abuse
Rajesh இப்போ இருப்பதையாவது காப்பாற்றுங்கள்............
Rate this:
Share this comment
Cancel
RameshNagarajan - Chennai,இந்தியா
16-செப்-201916:24:10 IST Report Abuse
RameshNagarajan தமிழக அரசாங்கம் இது போல பாரபட்சம் பார்காமல் தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் ஆக்கிரமிப்பு நடந்துள்ளதோ அங்கெல்லாம் தலையிட்டு ஏரி குளங்களை மீட்டெடுக்க வேண்டும். அப்படி செய்தால் ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்து சட்டசபை தேரதலில் வாக்களித்து ஆட்சிப் பொறுப்பில் அமர வைப்பாரகள். இது போல பல மாநில ப்ரச்னைகளை ஒவ்வொன்றாக தீர்க்க வேண்டும். பிறகு தேர்தல் நேரத்தில் வாக்கை கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும். இது உறுதி. ஆனால் ஆள்பவர்கள் எல்லாம் ஒன்றாக நின்று இந்த காரியங்களையெல்லாம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டைப் போல் எந்த மாநிலமும் இல்லை என்ற நிலைமையை உருவாக்க வேண்டும். இதை ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கம் தான் செய்ய வேண்டும். செய்வார்கள் என்று நம்புவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X