ஆவின் பால் விலை நிர்ணயத்தில் 50 காசு பஞ்சாயத்து: அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
01:10

மதுரை:மதுரையில் ஆவின் பால் பாக்கெட் விலை புழக்கத்தில் அதிகம் இல்லாத 50 காசுவில் முடியுமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 50 காசு இழக்க வேண்டியுள்ளது என வாடிக்கையாளர்கள் புலம்புகின்றனர்.


பால் விலை ஏற்றதையடுத்து ஆவின் பால், தயிர், மோர் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டன. 9 ரூபாயாக இருந்த 200 மில்லி கோல்டு பாக்கெட் விலை ரூ.10.50 ஆகவும், 10 ரூபாயாக இருந்த 'கவ் மில்க்' 250 மி., பாக்கெட் ரூ. 11.50 ஆகவும், 10 ரூபாயாக இருந்த தயிர் பாக்கெட் விலை ரூ.12.50 ஆகவும் உயர்த்தப்பட்டது.


இதில் 50 காசு புழக்கத்தில் இல்லாததால் ரூ.10.50க்கு பதிலாக ரூ.11ம், ரூ.11.50க்கு பதில் ரூ.12ம் வாடிக்கையாளர் கொடுக்க வேண்டியுள்ளது. மதுரையில் மட்டும் இதுபோன்ற சிக்கலான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு ரூ.10.50 பாக்கெட்டை ரூ.10.20 என ஆவின் வழங்குகிறது. அதன் விலையை 10 ரூபாயாக குறைத்து விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என வாடிக்கையாளர் எதிர்பார்க்கின்றனர்.


தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:


ஆவின் நிர்வாகம் உத்தரவுபடி ஏற்கனவே இருந்த ஒரு லிட்டர் பாலின் விலையை விட அதிகபட்சம் ரூ.6 உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் மதுரையில் அதிகபட்சமாக ரூ.7.50 விலை உயர்த்தப்பட்டது. இதனால் தான் புழக்கத்தில் அதிகம் இல்லாத 50 காசு முடியும் வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் நலன் கருதி விலை நிர்ணயித்ததில் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
16-செப்-201922:46:50 IST Report Abuse
atara Instead of doing paise rounddown , They can refill milk or content volume level like say Rs. 10 , Rs. 20 , and Fill mllk like variable size of 190ml instead of 200ml , or do upfilling by 210ml more milk quantity to Adjust the currencey limit.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
16-செப்-201911:30:22 IST Report Abuse
Darmavan ...
Rate this:
Cancel
kannan - Chennai,இந்தியா
16-செப்-201910:09:41 IST Report Abuse
kannan தமிழ்நாட்டில்தான் பால் விலை இவ்வளவு குறைவு ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X