பணத்திற்கு மட்டுமே பாதாள சாக்கடை 'கிளீன்'நகராட்சி முடிவால் திருமங்கலம் திணறுது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
01:20

திருமங்கலம்:திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான முன்பணத்தை செலுத்தாத பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய மறுப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.


இங்குள்ள காட்டுமாரியம்மன் கோயில் தெருவில் இருந்து விருதுநகர் வரை பழைய பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. இதற்கு பொதுமக்கள் இதுவரை பணம் செலுத்தவில்லை. தற்போது குறைந்தபட்ச கட்டணமாக நகராட்சி ரூ. 4 ஆயிரம் நிர்ணயித்துஉள்ளது. ஆனால் மக்கள் பணம் செலுத்த முன்வரவில்லை. சில நாட்களுக்கு முன்பு காமாட்சியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளில் இருந்து கழிவுகள் வெளியேறவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.


இதுதொடர்பாக நகராட்சி ஆய்வாளருக்கும், மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விவகாரம் போலீஸ் ஸ்டேஷன்வரை சென்றது. பின்னர்இருதரப்பும் சமரசம் செய்து வைக்கப்பட்டனர்.



ரமேஷ்: வீட்டு கழிப்பறைகளின் கழிவுகள் பாதாள சாக்கடைக்கு செல்லாமல் திறந்தவெளி சாக்கடையில் செல்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி கமிஷனரிடம்புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அடைப்பை சரி செய்ய வேண்டுமானால் பாதாள சாக்கடைக்கான முன்பணத்தை கட்ட வேண்டும் என்கின்றனர்.



பெரியசாமி: கடந்த 2 மாதமாக சாக்கடை அடைப்பு இருந்தது. அனைவரும் கலந்து பேசிய பின்னரே பணம் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்.



சுரேஷ்: சாக்கடை பிரச்னை குறித்து புகார் தெரிவித்ததால் பெண்களிடம் அதிகாரிகள் சத்தம் போட்டுள்ளனர். காலை நேரத்தில் குழாயில் குடிநீர் வரும் போது அருகில்சாக்கடையில் மனித கழிவுகள் வருவதால் தண்ணீரை பிடிக்க மனம் ஏற்கவில்லை.



நகராட்சி பொறியாளர் சக்திவேல்: 5 ஆயிரத்திற்கும்மேற்பட்ட வீடுகள் பழைய பாதாள சாக்கடை திட்டதின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு பணம் செலுத்துமாறு 3 மாதங்களாக அறிவித்து வருகிறோம். 1200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.இம்மாதம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வசூலாகியுள்ளது. சில தெருக்களில் வசிப்போர் பணம் செலுத்த மறுக்கின்றனர். பாதாள சாக்கடைக்கு பணம் கட்டும்பகுதிகளுக்கு மட்டுமே அதை பராமரிக்க முடியும் என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X