எம்.டி.சி., பணிமனை சுவரில் அழகோவியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
01:35

சென்னை:சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின், பட்டுல்லாஸ் சாலை பணிமனை சுவர்களில், ஓவியங்கள் வரைந்த மாணவர்களை, போக்குவரத்து செயலர், ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.



சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் மன இறுக்கத்தை குறைக்கும் வகையில், பல்வேறு செயல்பாடுகளை, நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, பணிமனையில் காலியாக உள்ள இடங்களில், மரம் வளர்ப்பது; பணிமனைகளை சுத்தமாக பராமரிப்பது; பணிமனை சுவர்களில், சாலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த ஓவியங்கள் வரைவது உள்ளிட்ட செயல்பாடுகளில், ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பணிகளில், தன்னார்வ அமைப்புகள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.ஏற்கனவே, தண்டையார்பேட்டை தொழிற்கூடத்தில், இந்த பணிகள் முடிக்கப்பட்டு, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிலையில், சமீப மாக, பட்டுல்லாஸ் சாலையில் உள்ள, மாநகர போக்குவரத்து கழக பணிமனை சுவரில், தனியார் ஓவியக் கல்லுாரி மாணவர்கள், விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனர். இதை நேரில் பார்வையிட்ட, போக்குவரத்து செயலர், ராதாகிருஷ்ணன், மாணவர்களின் ஓவிய திறனையும், சமூக அக்கறையையும் பாராட்டினார்.மேலும், பணிமனை உணவகத்தில் உணவருந்தி, அதன் தரத்தை ஆய்வு செய்து, தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X