| அடையாளம் தெரியாதவர் கார் மோதி பலி Dinamalar
அடையாளம் தெரியாதவர் கார் மோதி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2019
01:47

புதுச்சேரி: காலாப்பட்டில் சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி இறந்தார்.காலாப்பட்டில், புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவு வாயில் எதிர்புறத் தில், நேற்று மாலை 5:00 மணி அளவில், சாராயக்கடை அருகில் இருந்து வந்த 50 வயது மதிக்க தக்க நபர், கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த டி.என். 14. ஆர். 6750 மாருதி ஆம்னி கார் மோதியது.இதில் துாக்கி வீசப்பட்ட அடையாளம் தெரியாத நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர், மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X