| அம்பத்துார், கிண்டி ஐ.டி.ஐ., இன்று நேரடி சேர்க்கை Dinamalar
அம்பத்துார், கிண்டி ஐ.டி.ஐ., இன்று நேரடி சேர்க்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2019
01:54

சென்னை:அம்பத்துார் மற்றும் கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பல்வேறு தொழிற்பிரிவுகளில், இன்று நேரடி சேர்க்கை நடக்க உள்ளது.



அம்பத்துார் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில், இன்று நேரடி சேர்க்கை நடக்க உள்ளது. அதில், கம்பியர் கருவிகள், செயலகம் பயிற்சி, கட்டட வரைவாளர், தையல் தொழில் நுட்பம் ஆகிய பிரிவுகளில், சேர்க்கை நடக்கிறது.நேரடி சேர்க்கைக்கு வருவோர், அசல் கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும். பயிற்சியில் சேர்வோருக்கு, இலவச மடிக்கணினி, மிதிவண்டி, இலவச பஸ் பாஸ், பாடபுத்தகம், சீருடை ஆகியவற்றுடன், மாதாந்திர உதவித்தொகையாக, 500 ரூபாய் வழங்கப்படும்.கிண்டியில் உள்ள, தொழிற்பயிற்சி நிலையத்திலும், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத, எட்டு தொழிற்பிரிவுகளுக்கு, இன்று நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X