| வீரர்களை விரட்டிய காளைகள்: மஞ்சுவிரட்டில் 2 பேர் காயம் Dinamalar
வீரர்களை விரட்டிய காளைகள்: மஞ்சுவிரட்டில் 2 பேர் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2019
03:06

சிவகங்கை:சிவகங்கை அருகே கருத்தன்பட்டி கைலாச விநாயகர் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.


கருத்தன்கண்மாயில் நடந்த மஞ்சுவிரட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 150 மாடு பிடி வீரர்கள் களம் இறங்கினர். தொழு மற்றும் பொட்டலில் இருந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க முயன்ற வீரர்களை விரட்டி அடித்தது, சில காளைகள் தரையில் படுத்திருந்த வீரர்களை விரட்டியடித்தது. காளைகள் முட்டியதில் 2 பேர் லேசான காயம் அடைந்தனர். விழாக்குழு சார்பில் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கினர். மஞ்சுவிரட்டை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X