மானாமதுரை, செப்.16-மானாமதுரை கண்ணார்தெரு பெருமாள் மகன் பிரதீப்பாண்டியன் 19, இவர் பூவந்தி தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் சம்பளம் வாங்கி டூவீலரில் வீடு திரும்பினார். அப்போது கண்ணார்தெருவை சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் 25, அடைக்கலம் மகன் சரத்குமார் 19, ஆகிய இருவரும் கத்தியை காட்டி பிரதீப்பாண்டியனின் பணத்தை வழிப்பறி செய்து தப்பினர். மானாமதுரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.