| சித்தலூரில் ஆசிரியர்கள், ஆசிரியைகளை விசாரிக்க குழு Dinamalar
சித்தலூரில் ஆசிரியர்கள், ஆசிரியைகளை விசாரிக்க குழு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2019
03:20

சிவகங்கை:சிவகங்கை அருகே சித்தலுார் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியை குறித்து விசாரிக்க 3 தலைமை ஆசிரியர்களை கொண்ட குழுவை கலெக்டர் ஜெயகாந்தன் நியமித்துள்ளார்.


இப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ, ஆசிரியை கலையரசி யிடம் ஆபாசமாக பேசியதாக கூறி,தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து செப்.,9 அன்று போலீசார் வழக்கு பதிந்துஉள்ளனர்.இதையடுத்து ஆசிரியைக்கு ஆதரவாக மாதர் சங்கமும், தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக பெற்றோர் ஆசிரியர் கழகமும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.விசாரணைக்குகலெக்டர் உத்தரவு: இதையடுத்து, பிரச்னையின் உண்மை தன்மை குறித்து சித்தலுாரில் வீடு வீடாக சென்று விசாரிக்க, 2 பெண்களை கொண்ட 3 தலைமை ஆசிரியர் குழுவை கலெக்டர் ஜெயகாந்தன் நியமித்துள்ளார். அவர்கள் இன்று சித்தலுாரில் விசாரித்து தனித்தனியாகஅறிக்கை வழங்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X