துவங்கியது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
03:31

சிவகங்கை:கந்தக பூமியான சிவகங்கையில் கடந்த சில நாட்களாக கொளுத்திய வெயிலை தகிக்க முடியாமல் தவித்த மக்களுக்கு குளிர்ச்சி தரும் விதத்தில் பருவமழை துவங்கியது. மழையால் விவசாயிகள் மனம் குளிர்ந்தன.


தேவகோட்டையில் நேற்று அதிகபட்சமாக 46.4 மி.மீ., மழை பதிவானது.கடந்த சில ஆண்டாக பருவமழை கைகொடுக்காமல், சிவகங்கை மாவட்டம் வறண்டு காணப்பட்டன. விவசாயிகள் தங்கள் தொழிலை கைவிட்டு, வேறு பிழைப்பு தேடி செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழையை நம்பியே விவசாயிகள் தங்கள் நிலங்களை உழவு செய்து காத்திருந்தனர். சிலர் அவ்வப்போது பெய்த துாறல் மழையில் நிலத்தை உழுது மானாவாரியாக நிலக்கடலை, பயிறு வகைகளை நடவு மழைக்காக காத்திருந்தனர். விவசாயிகளுக்கு ஏமாற்றம் தராமல், ஆறுதல் அளிக்கும் விதத்தில் பருவமழை மாவட்டத்தில் பரவலாக துவங்கிவிட்டன. பருவ மழையை நம்பி ரூ.38 கோடியில் 109 கண்மாய்கள் குடிமராமத்து பணி நடக்கிறது. கண்மாய் மண் எடுத்து கரைகளை மட்டுமே பலப்படுத்தியுள்ளனர். அதேநேரம் மழை நீர் வரும் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து கால்வாய்களை முழுமையாக துார்வாரவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை கால்வாய் வழியே கண்மாய்க்குள் செல்லாமல் அடைபட்டு கிடக்கிறது. இருப்பினும் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், உழவு பணிகளை மேற்கொண்டு நெல் நடவை துவக்கும் விதத்தில் விவசாயிகள் தயாராகி வருகின்றனர். மொத்தத்தில் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பருவமழையின் விமோசனத்தால் கந்தகபூமியான சிவகங்கை குளிர்ந்து வருகிறது.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X