| ஆவராம்பாளையம் நடுரோட்டில் நடக்கும் பாதசாரிகள் Dinamalar
ஆவராம்பாளையம் நடுரோட்டில் நடக்கும் பாதசாரிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2019
04:35

நடைபாதை ஆக்கிரமிப்புஆவராம்பாளையம், எம்.ஜி.ரோட்டில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால், பாதசாரிகள் போக்குவரத்து நிறைந்த சாலையில் பயத்துடன் நடந்து செல்கின்றனர்.- ஜெகன், ஆவராம்பாளையம்.

தெருவெல்லாம் குப்பைமாநகராட்சி, 86வது வார்டுக்கு உட்பட்ட, பேரூர் ரோடு, செல்வபுரத்தில், குப்பை தொட்டி இல்லாததால், குப்பை சாலையோரம் குவிக்கப்படுகிறது.- பாலமுருகன், செல்வபுரம்.

பணி துவங்குவது எப்போதுசின்னியம்பாளையம் செக்போஸ்ட் - ஆர்.ஜி.புதுார் சாலையை செப்பனிட, ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட்டு, நீண்ட நாளாகியும் இன்னும் பணி துவங்கவில்லை.- சின்னசாமி, ஆர்.ஜி.புதுார்.

தேவா நகரில் கும்மிருட்டுதடாகம் ரோடு, இடையர்பாளையம், தேவா நகர், ரங்கநாதன் வீதியில், தெருவிளக்குகள் எரிவதில்லை.- ஹரீஷ், தேவா நகர்.

குழியை மூட மறந்தது ஏன்விளாங்குறிச்சி ரோடு, பால்காரன் தோட்டம், விக்னேஷ் நகரில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியை மூடாமல் விட்டு விட்டனர். விபத்து ஏற்படுகிறது.- பாலசுப்ரமணியன், விக்னேஷ் நகர்.

சிக்னல் இயங்குவதில்லைகாந்திபுரம், பாரதியார் ரோடு, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அருகில் உள்ள, போக்குவரத்து சிக்னல் இரவு, 7:00 மணிக்கு மேல், செயல்படுவதில்லை.- ஜானவி, சித்தாபுதுார்.

வெளிச்சம் வேண்டும்சரவணம்பட்டி, சிவானந்தபுரம், ஜனதா நகர், நேதாஜி வீதியில், கடந்த இரு மாதங்களாக, தெருவிளக்குகள் எரிவதில்லை.- பாக்கியலட்சுமி,நேதாஜி வீதி.

குப்பை அள்ளுவதில்லைமாநகராட்சி, 47வது வார்டுக்கு உட்பட்ட, தெய்வநாயகி நகர், சங்கனுார் ரோடு, பெட்ரோல் பங்க் பின்புறம், குவிந்துள்ள குப்பை அள்ளப்படாமல் உள்ளது.- நாகராஜன், தெய்வநாயகி நகர்.

சாக்கடை கால்வாய் அடைப்பால் அவதிபேரூர், எல்.ஐ.சி., காலனி, நேரு காலனி அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு நீர் தங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராம்குமார், நேரு காலனி.

விளக்குகள் எரிவதில்லைவிளாங்குறிச்சி, சிவானந்தா மில் ரோடு, குமரன் நகரில் உள்ள மின் கம்பங்களில்(எண்: 40, 50), பல மாதங்களாக விளக்குகள் எரிவதில்லை.-பால்ராஜ், குமரன் நகர்.

துப்புரவு பணி மேற்கொள்வதில்லைவெள்ளலுார் ரோடு, அற்புதம் நகரில், துப்புரவு பணியாளர்கள் பணி மேற்கொள்வதில்லை. அனைத்து இடங்களிலும் குப்பை குவிந்துள்ளது.- தங்கராஜ், அற்புதம் நகர்.

சோலார் விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட, பொம்மணம்பாளையம், ஜி.கே.எஸ்., நகரில், புதிதாக கட்டப்பட்ட நுாலகம் அருகில் உள்ள, சோலார் மின் விளக்கு எரிவதில்லை.- குமாரசாமி, வடவள்ளி.

குழாய் உடைப்பு குடிநீர் வீண்மேட்டுப்பாளையம் ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், சாலையோரம் செல்லும் பிரதான குழாய் உடைப்பால், பல நாட்களாக குடிநீர் வீணாகிறது.- தினேஷ்குமார், மேட்டுப்பாளையம் ரோடு.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X