இந்த வாரம்...ஆரவாரம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
04:36

செப்.,16: பிரம்ம சூத்திரம்மதச்சார்பற்ற பிரம்ம சூத்திரம், கைக்குள் அகப்படுத்தப்பட்ட கடல் என ஆதிசங்கரர் புகழ்கிறார். பிரம்ம சூத்திரம் குறித்து, ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் சிறப்பு சொற்பொழிவு, காலை, 10:00 மணி முதல் நடக்கிறது.

செப்., 16: கும்பாபிஷேக விழாஸ்ரீ கம்பீர விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 6:30 மணிக்கு, இரண்டாம் கால யாகமும், காலை, 9:00 மணிக்கு, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, சாலாகார கோபுரம் கும்பாபிஷேகம் மற்றும் கால பைரவர், நவக்கிரக மறு பிரதிஷ்டை நடக்கிறது.

செப்.,18: கைவினை கண்காட்சிஆவர்ணா கோயமுத்துார் சார்பில், கைவினை பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. பொம்மைகள், டெரகோட்டா ஜூவல்லரி, பென்டன்ட் மற்றும் பீட்ஸ் ஜூவல்லரி, ஜூவல்லரி பவுச் மற்றும் இயற்கை அழகுபொருட்கள் என பல்வேறு கைவினை பொருட்கள் கிடைக்கின்றன. வரும் 19ம் தேதி வரை, காலை, 8:30 முதல், 9:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.

செப்.,18: இயற்கை துாய்மைரசாயனங்களின் தீமைகளை உணர்ந்தாலும், ஆன்லைனில் துாய்மையான இயற்கை பொருட்களைகண்டறிவதில் குழம்பி விடுகின்றனர்.அரப்பு, சீவக்காய், பீர்க்கங்காய் கூடு என இயற்கை அழகு சுத்தப்படுத்திகள் குறித்த பயிலரங்கு நடக்கிறது. காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரை நடக்கும் பயிலரங்கில், முன்பதிவு செய்து பங்கேற்கலாம்.

செப்.,19: ஆறுமுகனும் அறுபடை வீடும்உள்ளமெல்லாம் முருகனின் பெயரை, சொல்ல சொல்ல இனிக்கும். செல்லாண்டியம்மன் கோவிலில், 'ஆறுமுகனும் அறுபடைவீடும்' என்ற தலைப்பில், சிறப்பு கிருத்திகை சொற்பொழிவு, மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.

செப்., 20: சேலை கண்காட்சிகனகவள்ளி கோயமுத்துார் சார்பில், 'கட்டம் மற்றும் வரி' என்ற தலைப்பில், செக்குட் மற்றும் ஸ்டிரைப்ஸ் காஞ்சிவரம் பட்டாடைகளுக்கான பிரத்யேக கண்காட்சி நடக்கிறது. வரும் 22ம் தேதி வரை, காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை, இலவசமாக பார்வையிடலாம்.

செப்.,22: அழகு கலை கற்போம்ஒவ்வொரு விழாவுக்கும் மேக்கப்புக்கு, ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறோம். இனி, உங்களுக்கு நீங்கள்தான் அழகு கலை நிபுணர். செல்ப் மேக்கப் செய்துகொள்வது குறித்து, காலை 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, ஒரு நாள் பயிலரங்கு நடக்கிறது. முன்பதிவு செய்வது அவசியம்.

செப்.,22: பகவத்கீதைகடலில் ஆறுகள் சென்று அடங்குவது போல, ஆசைகளை அடங்குபவர்களே மன அமைதி பெறுகிறார்கள் என போதிக்கும், பகவத்கீதை வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. சீரடி சாய்பாபா துவாரகமாயி கோவிலில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை: 6:00 மணிக்கு நடக்கிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X