எல்லையில் தொல்லை! கோவை சுற்றுலா, சரக்கு வாகனங்களுக்குஅபராதம் செலுத்தாமல் அனுமதியில்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
04:39

கோவை:தமிழக அரசு போக்குவரத்து துறையில், நடைமுறையில் இருந்த, 'வாகன் 4' சாப்ட்வேருக்கு பதிலாக, 'வெர்சன் 4' சாப்ட்வேர் பயன்படுத்துவதால், அசல் ஆவணங்கள் இன்றி எந்த ஒரு வாகனமும், கோவை வழியாக கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு, செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செல்ல நேரிடும் வாகனங்கள், கடுமையான அபராதம் செலுத்திய பிறகே, அனுமதிக்கப்படுகின்றன.


தமிழக அரசு போக்குவரத்துத்துறையில், இதுவரை வாகன் 4 என்ற சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. தற்போது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, வெர்சன் 4 சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது. நாடு முழுக்க இந்த சாப்ட்வேர், நடைமுறைக்கு வந்து விட்டது.ஏன் இந்த சாப்ட்வேர்?ஆர்.டி.ஓ., அலுவலகங்களை ஒருங்கிணைக்கவும், பணிகளை எளிமைப்படுத்தவும், தகவல்களை எந்த ஒரு இடத்திலிருந்தும், இணையம் வாயிலாக தெரிந்து கொள்ளவும், இந்த சிறந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.பழைய வாகன் 4 சாப்ட்வேரின்படி, வெளிமாநிலங்களுக்கு செல்லும் சரக்கு மற்றும் சுற்றுலா வாகனங்கள், முன்னதாக சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்(ஆர்.டி.ஓ.,), 'பர்மிட்' பெற வேண்டும். தவறினால், சோதனைச்சாவடியில் சம்மந்தப்பட்ட வாகனத்தின் உண்மை சான்றை காண்பித்து, 'ஸ்கேன்' செய்து 'பர்மிட்' பெறலாம்.


இனி முடியாது


புதிய வெர்சன் 4 சாப்ட்வேரின்படி, இனி 'ஜெராக்ஸ்' சான்றிதழ்களை வைத்து, 'பர்மிட்' பெற முடியாது. அதனால், 'பர்மிட்' இன்றி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு, ஏற்றி செல்லும் சரக்கிற்கு தகுந்தாற்போல், அபராதம் விதிக்கப்படுகிறது. சுற்றுலா வாகனங்களுக்கு இருக்கைக்கு தகுந்தாற்போல், அபராதம் விதிக்கப்படுகிறது.நாடு முழுக்க திருத்தியமைக்கப்பட்ட, போக்குவரத்து விதிமுறைகளின் கீழ், புதிய வரி மற்றும் அபராதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், அபராத தொகை பல ஆயிரம் ரூபாய்களை எட்டிப்பிடிக்கிறது.


கடனில் வாங்கும் வாகனங்களின் ஒரிஜினல் ஆவணம், பெரும்பாலும் நிதி நிறுவனத்தில்தான் இருக்கும். ஆகவே, இந்த ஆவணமின்றி பர்மிட் பெற செல்லும் வாகனங்கள், பெரும் தொகையை, அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது.இது குறித்து கோவை கேரள எல்லையிலுள்ள, போக்குவரத்து சோதனைச்சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி கூறியதாவது:அரசின் வழிகாட்டுதல்படி, வாகன ஓட்டுனர்கள் அந்தந்த எல்லைக்குட்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், பர்மிட் பெற்று வந்தால், எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் 90 சதவீதம் பேர் சோதனைச்சாவடிக்கு வந்த பின்பே, 'பர்மிட்' பெற முயற்சிக்கின்றனர்.


அதற்கு, பதிவுச்சான்று, இன்சூரன்ஸ், தகுதிச்சான்று, வரி ரசீது, 7 ஆண்டுக்கு பிந்தைய வாகனமாக இருந்தால் பசுமைவரி, புகைச்சான்று, லைசென்ஸ் ஆகியவற்றின் உண்மைச்சான்று அவசியம். இவை இல்லாமல் வந்தால், 'பர்மிட்டை' ஆன்லைனில் பெறமுடியாது. அபராதம் செலுத்திய பின்பே செல்ல முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.அபராதம் எவ்வளவு?முன்பு மேக்சிகேப்புக்கு ஒரு சீட்டுக்கு அபராதமாக, 75 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது அது ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.'ஓவர்லோடுக்கு' 1,000 ரூபாய் எடைக்கு தகுந்தாற்போல் அபராதம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அது 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - coimbatore,இந்தியா
16-செப்-201910:27:35 IST Report Abuse
Raj எல்லையில் பகல் கொள்ளை என பொருத்தமாக தலைப்பை மாற்றுங்கள். ஒவ்வொரு கனரக வாகனத்துக்கும் GPS கூடிய ஆதார் போன்ற பதிவு எண் இருந்தால் நாடு முழுதும் பயணிக்கலாம், வங்கி கணக்கிலிருந்து பெர்மிட் கட்டணம் கழித்து கொள்ளும் வசதி வந்தால் மிக விரைவாக வாகனங்கள் லஞ்சம் கொடுக்காமல் போகலாமே. இதெல்லாம் செய்தால் லஞ்சம் வாங்க முடியாதே ? மக்கள் முக்கியமா, பணம் முக்கியமா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X