உருவாகிறது, திறமை!கிராமப்புற இளைஞர்கள் 90 பேர், திறன் மேம்பாட்டு பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

16 செப்
2019
07:16
பதிவு செய்த நாள்
செப் 16,2019 05:19

திருப்பூர்:கிராமப்புற இளைஞர்கள் 90 பேர், திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து, பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிவதற்கு தயாராகியுள்ளனர். பணியில் சேரும் இளைஞர்களை நேரடியாக பணியில் ஈடுபடுத்தாமல், பயிற்சி முடித்த பின், பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கருத்து, தற்போது வலுத்து வருகிறது.


திறன் மிக்க தொழிலாளரை பணி அமர்த்தச்செய்து, திருப்பூர் பின்னலாடை துறையை பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலிபாளையம் நிப்ட்--டீ கல்லுாரி. மத்திய, மாநில அரசு திட்டங்களை பயன்படுத்தி, இக்கல்லுாரி, இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணி அமர்த்துகிறது.தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கு, தையல், மெர்ச்சன்டைசிங், பேஷன் டிசைன், உற்பத்திமேற்பார்வையாளர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதற்காக, கல்லுாரியில் இரண்டு; மதுரையில் ஒன்று என மூன்று பயிற்சி மையங்கள் இயங்குகின்றன.கிராமப்புற ஆண், பெண்களுக்கு, மூன்று முதல் நான்கு மாதங்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை, 92 பேர் பயிற்சி முடித்து, பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அடுத்த ஒரு வாரத்துக்குள் 90 பேர், தையல், தர கட்டுப்பாடு, பேஷன் டிசைனிங் பயிற்சிகளை முடிக்க உள்ளனர்.இவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதற்காக, நிப்ட்--டீ கல்லுாரியில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தில், தினமும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆடை உற்பத்தி நிறுவனங்கள், முகாமில் பங்கேற்று, தங்களுக்கு தேவையான திறன் மிக்க தொழிலாளரை தேர்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், புதிய தொழிலாளரை பணி அமர்த்தி வருகின்றன.


அனுபவம் இல்லாதவர்களைவிட, பயிற்சி பெற்ற தொழிலாளரை பணி அமர்த்துவதன் மூலம், அவசர கால ஆர்டர்களையும் கூட எளிதாக கையாள முடியும்.


நிப்ட்--டீ கல்லுாரி திறன் மேம்பாட்டுத்துறை தலைவர் சிவஞானம் கூறியதாவது:நிறுவனத்தினர், தாங்கள் அழைத்துவரும் கிராமப்புற தொழிலாளரை நேரடியாக பணி அமர்த்து வதற்குபதில், இலவச பயிற்சி மையத்தில் சேர்க்க வேண்டும்; நான்கு மாதங்களில் பயிற்சி முடித்து, திறன் மிக்கவர்களாக தொழிலாளரை பணி அமர்த்திக்கொள்ளலாம்.


காலை, மாலை தனித்தனி பிரிவுகளாக பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.எனவே, புதியவர்களை, பகுதி நேரம் பயிற்சிக்கும்; மற்ற நேரம் பணி செய்யவும் விடலாம். பயிற்சி பெற்றவர்களை பணி அமர்த்தினால், உற்பத்தி மேம்படும், தவறுகள் குறையும், குறித்த காலத்துக்குள் திட்டமிட்டபடி தயாரிப்பை பூர்த்தி செய்யலாம். தொழிலாளரின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், இப்பயிற்சி கைகொடுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X