பூட்டிக்கிடக்கும் கைவினை பொருட்கள் விற்பனை மையம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
05:32

உடுமலை:உடுமலையில் மகளிர் குழுவினரின் கைவினைப் பொருட்கள் விற்பனை மையம், செயல்பாடில்லாமல் பூட்டியே கிடக்கிறது.உடுமலையில், 484 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மகளிர் குழுக்கள் துவக்கப்பட்டன.மகளிர் திட்டத்தின் சார்பில், குழுவினரின் தனித்திறன்கள் ஊக்குவிக்கப்படுகிறது.


இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படுகிறது.இதில், மகளிர் குழுக்கள் மூலம், பெண்களுக்கான கைப்பைகள், அலங்கார பொருட்கள், தென்னை நார் மூலம் செய்யும் பொருட்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்களை குழுவினர் மூலம் செய்து, நேரடியாக சந்தைப்படுத்தும் திட்டமும் உண்டு. இவ்வாறு கைவினைப் பொருட்கள் விற்பதன் மூலம் கிடைக்கப்பெறும் தொகை, குழுவின் அடுத்தகட்ட சுயதொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது.முதலில், குழுவினர் செய்யும் இந்த கைவினைப் பொருட்கள், இடைத்தரகர்கள் மூலம், சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால், இதன் மூலம் குழுவினர் முழுமையாக பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தால், நேரடியாக சந்தைப்படுத்தப்பட்டது.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், இந்த கைவினைப்பொருட்கள் மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், குழுவின் உறுப்பினர் ஒருவரே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். அவ்வாறு உடுமலை பஸ் ஸ்டாண்டிலும், இம்மையம் கடந்த 2015ம் ஆண்டு துவக்கப்பட்டது.ஆனால், இந்த மையம் எந்த செயல்பாடும் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது.


துவக்கத்திலிருந்து மையத்தில் பொருட்கள் விற்பனை குறைவாகவே இருந்ததால், மகளிர் திட்டத்தின் சார்பிலும் முக்கியத்துவம் பெறாமல் உள்ளது. பஸ் ஸ்டாண்டின் விரிவாக்கத்தின் அடிப்படையில் பல கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், இதில் குழுவினரின் பலரது வாழ்வாதாரமும் உள்ளடங்கி இருப்பதால், இதனை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இருப்பினும், இந்த அங்காடிக்கு முக்கியத்துவம் அளிப்பதில் மகளிர் திட்டத்தினர் அலட்சியமாக உள்ளனர். மேலும், கைவினைப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதும் இந்நிலைக்கு காரணமாக உள்ளது.மகளிர் திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பது மட்டுமே இப்பிரச்னையின் தீர்வாக உள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X