| உடுமலை பஸ் ஸ்டாண்டில் பஸ் மோதி 2 பேர் காயம் Dinamalar
உடுமலை பஸ் ஸ்டாண்டில் பஸ் மோதி 2 பேர் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2019
05:44

உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் மீது, தனியார் பஸ் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.பழநியைச்சேர்ந்தவர் செல்வராஜ், 53. பொன்னேரி அய்யன் புதுாரை சேர்ந்தவர் முருகேசன், 38. இருவரும் நேற்று உடுமலை பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, பஸ் ஸ்டாண்டின் உள்ளே கட்டுப்பாடின்றி வேகமாக தனியார் பஸ் வந்தது. அதைக்கண்ட பயணிகள் அலறியடித்து ஓடினர்.அச்சமயம் செல்வராஜ் மற்றும் முருகேசன் ஆகியோர் மீது பஸ் மோதி பலத்த காயமடைந்தனர். இருவருக்கும் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X