காட்டு யானை நடமாட்டம் அதிகரிப்பு; வனத்துறை கண்காணிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
06:47

ஆனைமலை:ஆனைமலை அடுத்த ஆழியாறு, சேத்துமடை பகுதிகளில், காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.ஆழியாறு, சேத்துமடை, தம்மம்பதி, சரளைப்பதி உள்ளிட்ட பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளன.


இப்பகுதி விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கை.அதேபோல், நவமலை பகுதிகளில் இருக்கும் யானைகளும், ஆழியாறு வனப்பகுதிகளில் இருக்கும் யானைகளும், ஆழியாறு அணைக்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம்.நேற்று, ஆழியாறு குரங்கு அருவி அருகே, வால்பாறை ரோட்டில் ஒற்றை ஆண் காட்டு யானை நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.அங்கு, வால்பாறை ரோட்டில் அங்குமிங்குமாக உலாவிக்கொண்டு இருந்த யானையால், போக்குவரத்து பாதித்தது. வனத்துறையினர் கடும் போராட்டத்துக்கு பிறகு யானையை வனத்திற்குள் விரட்டினர்.அதேபோல், நேற்று முன்தினம் இரவு, சேத்துமடை சோதனைச்சாவடி அருகே, தனியார் வயலில், ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்து, பயிர்களை சேதப்படுத்தியது.


அங்கிருந்த வீட்டை சேதப்படுத்தி, உணவுப்பொருட்களை சாப்பிட்டது.தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டினர்.பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் கூறுகையில், ''இரண்டு குழுக்கள் மூலம், வனத்தை ஒட்டிய பகுதிகளில் ரோந்து செல்கிறோம். யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம். மேலும், ஒலி பெருக்கி மூலம் மலையடிவார கிராம மக்களுக்கு, இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்; யானையை கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X