சிதிலமடைந்த பள்ளி: ஆதிவாசி மாணவர்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
06:57

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, சின்னாறுபதி அரசு துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.சின்னாறுபதி பழங்குடியின குழந்தைகளுக்காக, 12 ஆண்டுகளுக்கு முன்பு, ஆழியாறு மின்வாரிய குடியிருப்பு வளாகத்தில், சின்னாறுபதி அரசு துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது.முதல் இரண்டு ஆண்டுகள், பி.ஏ.பி., குடியிருப்பு அருகே, இப்பள்ளி செயல்பட்டது.


கடந்த பத்தாண்டுகளாக, மின்வாரிய குடியிருப்பு அருகே செயல்படுகிறது. தற்போது, பழங்குடியின சிறுவர்கள் மற்றும் ஆழியாறு நகர் பகுதி சிறுவர்கள் என, 66 மாணவர்கள் படிக்கின்றனர்.சிமென்ட் சீட் மேற்கூரையுடைய இந்த கட்டடத்தில், மூன்று சிறிய அறைகள் உள்ளன. இடநெருக்கடியால் மாணவர்கள், கடும் சிரமத்துடன் கல்வி கற்கின்றனர்.பக்கவாட்டு சுவர்கள் வலுவிழந்து காணப்படுவதுடன், மேற்கூரை சிதிலமடைந்ததால் வகுப்பறைக்குள் மழைநீர் கசிகிறது. இதனால், பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர்.எனவே, இடநெருக்கடிக்கு தீர்வு காண பள்ளிக்கு இடம் ஒதுக்கி, புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.


இதற்காக, பள்ளி அருகே, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது; வருவாய்த்துறையினர் இடத்தை அளந்து, எல்லை கற்களும் நட்டனர்.ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக தடையின்மை சான்று கொடுக்காமல், பொதுப்பணித்துறையினர் இழுத்தடித்தனர். சமீபத்தில், பள்ளிக்கு இடத்தை ஒப்படைக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று பழங்குடி மக்கள், பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் புதர்கள் சுத்தம் செய்தனர். வருவாய்த்துறையினர் விரைவில் அளவை பணியை முடித்து, இடத்தை ஒப்படைக்க வேண்டும்; பள்ளிக்கு விரைவில், கட்டடம் கட்ட வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X