ஓமலூர்: ஓமலூரில், கோட்ட அளவில் மின் ஊழியர்களுக்கு, திறன் மேம்பாடு, பணிக்கால பாதுகாப்பு பயிற்சி வகுப்பு, நேற்று முன்தினம் நடந்தது. கோட்ட பொறியாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். அதில், முறையான வருமான வரி தாக்கல் செய்தல்; மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மின்கட்டமைப்பை மேம்படுத்தல்; நுகர்வோர் திருப்தி குறித்து விளக்கமளிக்கப்பட்டது. உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் பங்கேற்றனர்.