அண்ணாதுரை பிறந்ததினம் கொண்டாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
09:33

சேலம்: அண்ணாதுரை பிறந்த தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அண்ணாதுரையின், 111வது பிறந்த தினத்தையொட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேவுள்ள, அவரது சிலைக்கு, அ.தி.மு.க.,வின், மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில், அ.தி.மு.க.,வினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.ம.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், தி.மு.க., சார்பில் எம்.பி., பார்த்திபன் தலைமையிலும், அந்தந்த கட்சி நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


ஊர்வலம்: ஓமலூர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் தலைமையில், அ.தி.மு.க.,வினர், பஸ் ஸ்டாண்ட் அருகே, அண்ணாதுரை படத்துக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி, தாரமங்கலம், பஸ் ஸ்டாண்டிலிருந்து, ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன் தலைமையில் அ.தி.மு.க.,வினர், முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக சென்று, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர்.


அ.தி.மு.க., கொடி: தி.மு.க., தயக்கம்: பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையிலுள்ள, அண்ணாதுரை சிலையை சுற்றி, அ.தி.மு.க.,வினர், அக்கட்சி கலரில் பலூன் கட்டி, அவரது கையில், கட்சி கொடியை கட்டினர். பின், அ.தி.மு.க., முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலச்சந்திரன், நகர செயலர் சின்னதம்பி உள்ளிட்டோர், சிலைக்கு மாலை அணிவித்தனர். சற்று நேரத்தில், தி.மு.க., சார்பில், நகர செயலர் வரதராஜன், முன்னாள் நகர செயலர் சவுந்திரராஜன், சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். ஆனால், அவரது கையில், அ.தி.மு.க., கொடி இருந்ததால், அவர்கள் மாலை அணிவிக்கவில்லை. தொடர்ந்து, சிலைக்கு பின்புறம், தி.மு.க., கொடி கம்ப பீடத்தில், அண்ணாதுரை படத்தை வைத்து, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X