| மர்மக் காய்ச்சலால் 1ம் வகுப்பு மாணவி பலி Dinamalar
மர்மக் காய்ச்சலால் 1ம் வகுப்பு மாணவி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2019
09:34

வாழப்பாடி: மர்மக்காய்ச்சலால், ஒன்றாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். வாழப்பாடி அருகே, மன்னாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முரளி, ரேவதியின் மகள் வர்ஷாஸ்ரீ, 6; அதே பகுதியிலுள்ள, அரசு பள்ளியில் முதல் வகுப்பு படித்துவந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். நேற்று மதியம், அவர் உயிரிழந்தார். வைரஸ் காய்ச்சலால் இறந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மன்னாயக்கன்பட்டியில், காய்ச்சல் தடுப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர், ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.


கொசுக்கள் அதிகரிப்பு: வாழப்பாடி அருகே, மன்னாயக்கன்பட்டி, பேளூர், திருமனூர், இடையப்பட்டி, தும்பல், சிங்கிபுரம், சோமம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மாதமாக, பரவலாக மழை பெய்தது. இதனால், ஏரி, குளம், நீரோடைகளில், மழைநீர் தேங்கி, நன்னீரில் வாழும் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, சில நாளாக, மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பலர் பாதிக்கப்பட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X