கழிவு, பிளாஸ்டிக்கால் நாசமான வசிஷ்ட நதி: நோய் அபாயத்தில் சிக்கி மக்கள் அதோ 'கதி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
09:34

ஆத்தூர்: குப்பை, கழிவு, பிளாஸ்டிக்கால், வசிஷ்ட நதி சீரழிந்து, ஆற்றின் கரை பகுதியில் வசிக்கும் மக்கள், தொற்று நோய் அபாயத்தில் சிக்கியுள்ளனர்.


சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, தெற்கு மலைச்சரிவில், 1,266 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதி, ஆத்தூர், நரசிங்கபுரம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், தலைவாசல் வழியாக, 90 கி.மீ., தூரம் பாய்ந்து, வெள்ளாற்றில் கலக்கிறது. வசிஷ்ட நதியில், 192 சேகோ உள்பட, 262 தொழிற்சாலை கழிவு, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதி கழிவு, நேரடியாக சுத்திகரிக்காமல் கலப்பதால், நீர், நிலத்தன்மை பாதிப்புக்குள்ளாகிவருகிறது. வசிஷ்ட நதிக்கரையிலுள்ள, 1, 5, 8, 9, 10, 11, 12, 13, 15, 16வது வார்டு குப்பை, கழிவை, ஆற்றின் கரையில் கொட்டுகின்றனர். மேலும், வீடு, கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக நதியில் கலக்கிறது. இதனால், நதியில் பச்சை, கருப்பு நிறத்தில் கழிவுநீர் தேங்கியதோடு, மருத்துவம், ஓட்டல், கழிப்பறை கழிவும், சாக்கடை வழியாக ஆற்றில் கலக்கிறது. இங்கு, கொசு உள்ளிட்ட நோய் கிருமிகள் அதிகளவில் உற்பத்தியாவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கடந்த, 2011ல், நதியை, 100 நாளில் தூய்மைப்படுத்தல், சுத்திகரிப்பு செய்த நிலையில், கழிவுநீர் ஆற்றில் விடுவதாக, ஆத்தூர் நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இத்திட்டத்தை செயல்படுத்த, ஆய்வு கூட்டம், அலுவலர்களை நியமித்து பயிற்சி என, ஆயிரக்கணக்கில் செலவு செய்த நிலையில், மேற்கொண்டு, அரசு நிதி ஒதுக்காததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், புனித நதியாக இருந்த வசிஷ்ட நதி, 'கழிவுநீர்' நதியாக உருவெடுத்து, நோய் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.


வசிஷ்ட நதிக்கரையில் வசிக்கும் மக்கள் கூறியதாவது: கரையில், தினமும் கண்ணீர் வாழ்க்கை நடத்துகிறோம். 2011ல், கழிவுநீர் இல்லாமல், குப்பையற்ற நகரமாக மாற்றுவதாக தெரிவித்தனர். எட்டு ஆண்டாகியும், குப்பை, கழிவுநீர் அதிகரித்து வருவதால், தொற்று நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவை அகற்றி, நதியில், கழிவுநீர் விடுவது, குப்பை கொட்டுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஆத்தூர் நகராட்சி, சுகாதாரம், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவை, நீர்நிலைகளில் அகற்ற, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வசிஷ்ட நதியில் குப்பை கொட்டக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தேங்கியுள்ள கழிவை அகற்றும் பணி, விரைவில் மேற்கொள்ளப்படும். ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் சேகரமாகும் கழிவுநீர், சுத்திகரிப்பு செய்த பின் ஆற்றில் விட, தமிழக அரசு, விரைவில் நிதி ஒதுக்க உள்ளது. அதனால், அப்பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X