போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
23:57

மயிலாப்பூர் : வாகனங்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, நிதி நிறுவனத்தில், 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.



மாதவரத்தை அடுத்த, எம்.எம்.டி.ஏ., மாத்துாரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 37. வாகனங்களை வாடகைக்கு விட்டு, தொழில் செய்து வந்தார். இவர், மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, பிரபல நிதி நிறுவனத்திடம், சரக்கு வாகனத்திற்கு, 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். தலைமறைவுஓரிரு மாதத்தவணை தொகையை, முறையாக கட்டினார். பின், அதே நிதி நிறுவனத்தில், மேலும் ஒரு வாகனத்தை வாங்கி விட்டதாக கூறி, 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.



இரண்டு வாகனங்களுக்கும், 10 லட்சம் ரூபாய் கடன் பெற்ற நிலையில், மாதத் தவணை கட்டாமல் தலைமறைவானார்.இதையடுத்து, நிதி நிறுவனம், வாகனத்தை பறிமுதல் செய்ய சென்றபோது, வாகனங்களை காணவில்லை. வீட்டின் முகவரியும், போலியாக இருந்துள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சென்று, ஆவணங்களை சரிபார்த்த போது, அந்த வாகனங்கள், வேறு ஒரு நபரின் பெயரில் இருந்தது தெரிய வந்தது.




இது குறித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டதை அடுத்து. துணை ஆணையர் தலைமையில், மணிகண்டனை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது.நேற்று காலை, மணிகண்டன் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து, போலியான ஓட்டுனர் உரிமங்கள், பான் கார்டுகள், வாகன பதிவு சான்றிதழ், போலி பத்திரிகையாளர் அடையாள அட்டை போன்ற, பல்வேறு போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, வாகனங்களுக்கு வாங்கிய கடனுக்கான, மாதத்தவணை செலுத்த முடியவில்லை.



பதிவு சான்றிதழ் அப்போது, மாதவரத்தில் உள்ள, 'கன்டெய்னர்' சரக்கு வாகனங்கள் நிறுத்தத்தில் நின்ற, தனக்கு சம்பந்தமே இல்லாத சரக்கு வாகனத்திற்கு, தன் பெயரில், பதிவு சான்றிதழ், இன்சூரன்ஸ், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை, போலியாக தயாரித்து, அந்த ஆவணங்களை காட்டி, நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதே போல, பல்வேறு நிறுவனங்களில், பல வாகனங்களை காட்டி, ஆவணங்கள் தயாரித்து, மோசடி செய்திருப்பதாகவும், இவர் மீது, பலர் புகார் அளித்து வருகின்றனர்.



வாகனங்கள் மட்டுமின்றி, பல்வேறு வகையில், நுாதன மோசடிகள் செய்திருப்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவருக்கு, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்து, உடந்தையாக இருந்த, செல்வம் என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இதில் வேறு யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X