போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2019
00:05

வாலிபரை தாக்கியவர்களுக்கு, 'கம்பி'புளியந்தோப்பு: புளியந்தோப்பு அடுத்த கன்னிகாபுரம் அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. அங்குள்ள, வி.பி.என்., காலனியைச் சேர்ந்த அஜித்குமார், 26, லட்சுமணன், 25, ஆகியோர், குடிபோதையில் பக்தர்களுக்கு, இடையூறு செய்தனர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார், 30 என்பவர், இதை தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த அஜித்குமார், லட்சுமணன் ஆகியோர், ராம்குமாரை தாக்கினர். புளியந்தோப்பு போலீசார் விசாரித்து, அஜித்குமார்,லட்சுமணனை, நேற்று கைது செய்தனர்.



குட்கா வியாபாரிகளுக்கு, 'காப்பு'அம்பத்துார்: ஊரப்பாக்கம், எம்.ஜி.நகரைச் சேர்ந்தவர், மாரிமுத்து, 39; கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அம்பத்துார், புறவழிச்சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில், 3 மூட்டைகளுடன் சென்றார். கள்ளிக்குப்பம், சுங்கசாவடி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்ட அம்பத்துார் போலீசார், மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் குட்கா இருந்தது.



செங்குன்றத்தைச் சேர்ந்த மொத்த வியாபாரி, சங்கரலிங்கத்திடம் இருந்து, குட்கா வாங்கி, விற்பதாக தெரிவித்தார்.இதையடுத்து, சங்கரலிங்கம் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். நேற்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.மொபைல் பறித்த சிறுவன் சிக்கினான்கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம், கார்டன் சாலையைச் சேர்ந்தவர், சிவா, 21; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை வழியாக, மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார்.



அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த, நான்கு பேரில் ஒருவர். சிவாவின் மொபைல் போனை, பறித்து தப்பினார். கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்து, அயனாவரத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவனை நேற்று கைது செய்து, சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.பேனர் வைத்தவர்கள் மீது வழக்குபுளியந்தோப்பு: புளியந்தோப்பு, அம்பேத்கர் கல்லுாரி சாலை மற்றும் கோவிந்த சிங் தெரு ஆகியவற்றில், பொதுமக்களுக்கு இடையூறாக, பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. புளியந்தோப்பு போலீசார், இந்த பேனர்களை அகற்றினர். மேலும், பேனர் வைத்தது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், 48, சர்வேஸ், 42 ஆகியோர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.




10 சவரன் செயின் பறிப்புதாம்பரம்: ஈக்காடுதாங்கலைச் சேர்ந்தவர், முருகன், 35. இவரது மனைவி விமலா, 30. இவர், நேற்று மாலை, காஞ்சிபுரத்தில் நடந்த, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.நள்ளிரவு, 12:00 மணியளவில், தாம்பரம் பேருந்து நிலையம் வந்து, ஈக்காடுதாங்கல் செல்லும் பேருந்திற்காக நின்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், விமலாவிடம், 10 சவரன் செயினை பறித்து தப்பினர். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.46,000, 'அபேஸ்'ஆவடி: ஆவடி அடுத்த பருத்திப்பட்டை சேர்ந்தவர், பாரதி, 33. இவர், நேற்று முன்தினம் மாலை, வெளியில் சென்று வீடு திரும்பினார்.



ரயிலில் வந்த இவரது கை பையில் இருந்து, 46 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் தந்தை, தாய், மகள் காயம்அண்ணாசதுக்கம்: வங்கதேசத்தைச் சேர்ந்தவர், மொபிஜூடின், 58. இவரது மனைவி அதிராபீவி, 51. இவர்களது மகள், அமீனா கத்துார், 23. மூவரும் ஆட்டோவில், நேற்று முன்தினம் இரவு, சேப்பாக்கம், எம்.எல்.ஏ., விடுதி சாலையில் சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரி, ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், ஆட்டோவில் பயணித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் காயமடைந்தனர். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபரை வெட்டியவர் சிக்கினார் சாஸ்திரிநகர்: கண்ணகி நகரைச் சேர்ந்தவர், மணி, 23. கடந்த, 13ம் தேதி, பெசன்ட் நகரில், உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று பேர், அரிவாளால், மணியை சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்து, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சாஸ்திரி நகர் போலீசாரின் விசாரணையில், முன் விரோதம் காரணமாக தாக்கியது தெரியவந்தது.



கண்ணகி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 23, என்பவரை, நேற்று, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.கஞ்சா விற்றவர் சுற்றிவளைப்புவேளச்சேரி: வேளச்சேரியில், மாணவர்களை குறிவைத்து, கஞ்சா விற்பதாக, வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று, கல்லுாரி அருகில் ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில், கஞ்சா பொட்டலத்துடன், ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடிக்க முயன்ற போது, தப்பி ஓடினார்.வேளச்சேரி விரைவு சாலையில், போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.



விசாரணையில், கே.கே.நகரைச் சேர்ந்த கணேசன், 35, என தெரிந்தது. போலீசார், அவரை கைது செய்து, 2 கிலோ கஞ்சா, 5,000 ரூபாய், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X