| கன்டெய்னர்கள் வேலை நிறுத்தம் துறைமுகத்தில் சரக்குகள் தேக்கம் Dinamalar
கன்டெய்னர்கள் வேலை நிறுத்தம் துறைமுகத்தில் சரக்குகள் தேக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2019
00:07

காசிமேடு : 'அதிக அபராதம் விதிக்கப்படுவதால், அதிக பாரம் ஏற்ற மாட்டோம்' எனக்கூறி, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அபராதம் - சென்னை, துறைமுகத்தில், தினமும், 1 லட்சத்து, 40 ஆயிரம் கன்டெய்னர் லாரிகள், சரக்குகளை எடுத்துச் செல்கின்றன. செப்., 1ம் தேதி முதல், புதிய சாலை விதிகள்,கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அதிகப்படியான எடை ஏற்றும் லாரிகளுக்கு, 1,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபத்தில், டில்லி யில், அதிக பாரம்ஏற்றிய கன்டெய்னர் லாரி டிரைவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து, கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



இது குறித்து, தமிழ்நாடு கன்டெய்னர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர், மனோகரன் கூறியதாவது:துறைமுகங்களிலிருந்து வெளியேறும் கன்டெய்னர்களில், எவ்வளவு எடை உள்ளது என்பது, லாரியில் ஏற்றிய பின்பே தெரியும். தற்போது, 20 அடி கன்டெய்னர் லாரிகளில், 18.5 டன்னும், 40 அடி லாரிகளில், 28.5 டன் எடை உள்ள பொருட்களையும் மட்டுமே ஏற்ற வேண்டும்.ஆனால், தற்போது, 30 - 40 டன் எடைஏற்றப்படுவதால், அதிகளவில் அபராதமும், அதிக வாகன தேய்மானமும் மற்றும் விபத்துகளும்ஏற்படுகின்றன.



பாதிப்பு - இதை தடுக்க, துறைமுகம், எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்கள் மற்றும் சரக்கு கையாளும் பெட்டக மைய அதிகாரிகளிடம், 'லாரிகளில் அதிக எடை ஏற்ற மாட்டோம்' எனக்கூறி, கடந்த, 11ம் தேதி மனு அளித்தோம்.ஆனால், இதுவரை துறைமுகங்கள் சார்பில், எவ்வித பேச்சும் நடத்தவில்லை.நேற்று அதிகாலை முதல், 21 கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.



பேச்சு நடத்த அழைக்கும் வரை, போராட்டம் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.வேலை நிறுத்த போராட்டத்தால், சென்னை துறைமுகத்திலும், சரக்கு கையாளும் பெட்டகங்களிலும், ஒரு லட்சத்திற்கும் அதிக மான கன்டெய்னர்கள் தேங்கி கிடப்பதால்,ஏற்றுமதி, இறக்குமதிபணிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X