அறுந்த மின்வடத்தை மிதித்த மாணவன் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2019
00:09

மாங்காடு : போரூர் அருகே, இருசக்கர வாகனத்தை தள்ளி சென்றபோது, பூமிக்கு அடியில் அறுந்து கிடந்த மின்வடத்தை மிதித்து, ஒன்பதாம் வகுப்பு மாணவன், பரிதாபமாக இறந்தான்.



இந்த சம்பவத்தில், அலட்சியமாக இருந்ததாக, மாநகராட்சிஅதிகாரிகள் இருவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.வார விடுமுறைபோரூரை அடுத்த முகலிவாக்கம், சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர், செந்தில், 40; ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி வனிதா, 30. இவர்களுக்கு, தீனா, 14, கவுதம், 10, ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.தீனா, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள, பாட்டி வீட்டில் தங்கி, 9ம் வகுப்பு படித்து வந்தார்.



வார விடுமுறையில், முகலிவாக்கத்தில் உள்ள பெற்றோரை பார்க்க வந்து செல்வது வழக்கம்.சனி, ஞாயிறு விடுமுறைக்கு, பெற்றோரை பார்க்க, முகலிவாக்கம் வந்த தீனா, நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில், நண்பர்களுடன் விளையாடினார்.பின், வீட்டிற்கு புறப்பட்ட போது, நண்பரின் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்ததால், பெட்ரோல் நிரப்ப, அவருடன் சேர்ந்து, வாகனத்தை தள்ளி சென்றார்.முகலிவாக்கம், தனம் நகர் அருகே சென்றபோது, தேங்கியிருந்த மழைநீரில் இறங்கிய தீனா, திடீரென மயங்கி விழுந்தார்.



அங்கு, பூமிக்கு அடியில், அறுந்து கிடந்த மின் வடத்தை மிதித்ததால், உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கியது தெரியவந்தது.உடன் சென்ற தீனாவின் நண்பன், இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த சிறுவனுக்கு, வாய் பேச முடியாது என்பதால், தீனாவை காப்பாற்ற, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டார்.ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. சிறுவன் முடிந்தவரை போராடியும், தீனாவை காப்பாற்ற முடியவில்லை. தீனா, மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீனாவின் பெற்றோர், மகனின் உடலை பார்த்து கதறினர். நீண்ட நேரம் ஆகியும், போலீசார், மின்வாரிய அதிகாரிகள் வராததால், ஆத்திரமடைந்த அவர்கள், மவுன்ட் - பூந்தமல்லி சாலையில், தீனா உடலுடன் மறியலில் ஈடுபட்டனர்.சமரச பேச்சுபோலீசார் பேச்சு நடத்தியும், மறியலை கைவிடவில்லை.இதனால், அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேர சமரச பேச்சுக்கு பின், போலீசார், தீனாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.



இதற்கிடையில், மாநகராட்சி மின்துறை அதிகாரி களின் அலட்சியத்தால், தனது மகன் இறந்ததாக, தீனாவின் பெற்றோர், மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார், சென்னை மாநகராட்சி, 12வது மண்டல, மின்துறை அதிகாரிகள் இருவர் மீது வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.பள்ளம் தோண்டியதால் விபரீதம்!இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:இப்பகுதியில், பூமிக்கு அடியில் மின் வடம் செல்கிறது. இங்கு, கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டிய போது, மின்வடம் அறுந்துள்ளது.



இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்காததே இந்த சம்பவத்திற்கு காரணம்.ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள, மின் வடத்தில் இருந்து, மின் சப்ளை வரவில்லை. வேறு ஏதாவது மின்வடத்தில் இருந்து, மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக கூறுகின்றனர்.மாநகராட்சி ஊழியர்கள், முறையாக பணி செய்திருந்தால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. இச்சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X