| கிராம சுகாதார செவிலியர்களுக்கு பாலியல்ரீதியாக துன்புறுத்தல் பாதுகாப்பு கோரி மனு Dinamalar
கிராம சுகாதார செவிலியர்களுக்கு பாலியல்ரீதியாக துன்புறுத்தல் பாதுகாப்பு கோரி மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
00:01

ராமநாதபுரம் : ராமப்புறங்களில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கலெக்டர் வீரராகவ ராவிடம் மனு அளிக்க மாவட்ட தலைவி விமலா தலைமையில் வந்திருந்தனர்.



மனுவில் கூறியிருப்பதாவது: திருவாடனை தாலுகா, பாண்டுகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த அரசூர் சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் செவிலியர் தனது குழந்தைகளுடன் அரசு துணை சுகாதார நிலையத்தின் குடியிருப்பில் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார்.கடந்த செப்.,12ல் இரவு 11.15 மணிக்கு அதே ஊரை சேர்ந்த காளியம்மாள் என்பவரது மகன் பிரசாந்த் மருத்துவ உதவி கேட்பது போல் துணை சுகாதார நிலையத்திற்குள் புகுந்து கிராம சுகாதார செவிலியரை ஆடைகளை கிழித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.




காயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மிகுந்த அச்சத்துடனும் பதட்டத்துடனும் உள்ளார்கள். தங்கி பணிபுரியும் செவிலியரின் குடியிருப்பு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது. கட்டடம் மிகவும் மோசமாக இடிந்து விழும் நிலையில் சரியான கதவு, தாழ்பாள், மின்சாரம், தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளது. கிராம சுகாதார செவிலியரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பந்தபட்ட நபரை உடனடியாக கைது செய்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.



அனைத்து பாதுகாப்பு வசதியுடன் கூடிய துணை சுகாதார நிலையம் வேண்டும். புதிதாக கட்டக்கூடிய துணை சுகாதார நிலையம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இல்லாமல் ஊருக்குள் இருக்கவேண்டும். துணை சுகாதார நிலையத்தில் செவிலியருக்கு துணையாக பகலில் ஒரு ஆயாவும், இரவில் ஒரு ஆயாவும் பணிநியமனம் செய்து தரவேண்டும். செவிலியர்கள் எந்தவித பயமும் இல்லாமல் பணிபுரிய அரசு முழுபாதுகாப்பு வழங்கவேண்டும். என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X