| ஜவுளி பூங்கா திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு Dinamalar
ஜவுளி பூங்கா திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
00:04

திருவாடானை : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடியில்250 கோடி ரூபாய் செலவில் ஜவுளி பூங்கா அமைக்கும்திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.




ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடியில் 250 கோடி ரூபாய் செலவில் 224.65 ஏக்கர் நிலபரப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கஅரசு அனுமதி அளித்தது. இதற்காக தமிழ்நாடுமாசுக்கட்டுபாட்டு வாரியம் மூலம் பொதுமக்கள்கருத்து கேட்கும் கூட்டம் தொண்டியில் உள்ள தனியார் திருமண மகாலில் நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மணக்குடி,காரங்காடு, முள்ளிமுனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.




கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இத் திட்டம் குறித்து மனுக்கள் மூலமாகவும் வாய் மொழியாகவும்தெரிவிக்கலாம். இக் கருத்துகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு அதன் பின் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுப்பப்படும், என பேசினார். மாசுக்கட்டு பாட்டு வாரிய அதிகாரி கண்ணன் பேசியதாவது: 250 கோடி ரூபாய் செலவில் 224.65 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்படும்இத் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும்.பத்தாயிரம் பேருக்கு நேரடியாகவும், ஒரு லட்சம்பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள்கிடைக்கும்.




பொதுமக்களுக்கும் விவசாயத்திற்கு எந்தவித இடையூறு இல்லாமல் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்த இடத்தில் 60 சதவீத இடத்தில்தொழிற்சாலையும், மற்ற இடங்களில் சாலைவசதி, தண்ணீர் சுத்திகரிப்பு உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்படும், என்றார். பொது மக்கள் கருத்துகள் கேட்கபட்டது.மணக்குடியை சேர்ந்த வ.து.ந.ஆனந்த், லாரண்ஸ், காரங்காடு அருளானந்து, ஆனந்தி ஆகியோர் பேசுகையில்: இத் திட்டம் ஆரம்பிக்க போவது குறித்து இரு தினங்களுக்கு முன்பு தான் எங்களுக்கு தெரியும்.




பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று கூறினீர்கள். இதே போல் தான் உப்பூர் அணல் மின் நிலையத்திட்டம் ஆரம்பிக்கும் போது கூறினார்கள்.இதுவரை யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இது ஜவுளிபூங்கா இல்லை. இது ஒரு சாயப்பட்டறைஇதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில்கலந்து மீன்கள் இறக்க வாய்ப்புண்டு.இத்திட்டம் ஆரம்பிக்கும் இடம் எங்களின் பட்டா இடமாகும். எங்கள் இடத்தை அழிக்க வேண்டாம். மேய்ச்சல் நிலங்களை அழிப்பதன்மூலம் கால்நடைகள் பாதிக்கப்படும்.




ஆகவே இத் திட்டம் தேவையில்லை.என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்புகலெக்டர் பேசுகையில்- அனைவரின் கருத்துகளும் பதிவு செய்யபட்டு விட்டது. இது குறித்துஅரசின் கவனத்திற்கு கொண்டு செல்லபடும் என்றார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ. முத்துமாரி, தாசில்தார் சேகர், பி.டி.ஓ. ஸ்டெல்லா, மண்டல துணை தாசில்தார் சேதுராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X