| ஒரு மாதமாக அறுந்து கிடக்கும் மின் கம்பி Dinamalar
ஒரு மாதமாக அறுந்து கிடக்கும் மின் கம்பி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2019
00:06

முதுகுளத்துார் : காக்கூர் காமராஜபுரம் அருகே ஒரு மாதமாக ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதால் முதியோர் இருளில் தவிக்கின்றனர்.




முதுகுளத்துார்-ராமநாதபுரம் செல்லும் சாலையில் காக்கூர் காமராஜபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள விவசாய நிலங்களில் 5க்கும் மேற்பட்ட பம்புசெட் அறைகளுக்கு 20க்கும் அதிகமான மின்கம்பங்கள் வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பம்புசெட் அறைகளுக்கு செல்லும் மின் கம்பிகள் விவசாய நிலத்தில் அறுந்து கிடப்பதால் பணிகள் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.



இதுகுறித்து முதியவர் பூரணம் கூறியதாவது:பத்தாண்டுகளுக்கு மேலாகக பம்புசெட் அறையில் வாழ்கின்றோம். இங்கு மின்கம்பிகள்மரத்தில் சிக்குவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சொந்த செலவில் மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். தற்போது வரை பம்புசெட் அறைகளுக்கு செல்லும் மின் கம்பிகள் விவசாய நிலத்தில் அறுந்து கிடக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் இருளில் தவிக்கிறோம். பலமுறை மின்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது விவசாய பணிகள் துவங்க இருப்பதால் பம்புசெட் அறைகளுக்கு மின்சாரம் இல்லாததால் அவதிப்படுகிறோம்,என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X